வெளியிடப்பட்ட நேரம்: 01:30 (06/06/2018)

கடைசி தொடர்பு:07:52 (06/06/2018)

`பாழடைந்த இந்துசமய அறநிலையத்துறை நூலகம்!’ - தர்ணா போராட்டத்தில் இறங்கிய இந்து அமைப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான நூலகம் பல ஆண்டுகளாக பூட்டிக்கிடந்ததால் பாழடைந்துள்ளது. நூலகத்தை புதுப்பித்து மீண்டும் செயல்படுத்தகோரி இந்து கோயில் கூட்டமைபினர் போராட்டம் நடக்தினர்.

ன்னியாகுமரி மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான நூலகம் பல ஆண்டுகளாக பூட்டிக்கிடந்ததால் பாழடைந்துள்ளது. நூலகத்தைப் புதுப்பித்து மீண்டும் செயல்படுத்தக்கோரி இந்து கோயில் கூட்டமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

நூலகம்

கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்த சமயத்தில் இந்துக் கோயில்கள் மற்றும் சமயம் தொடர்பான கருத்துகளை மக்கள் அறிந்துகொள்ள நாகர்கோவிலில் ஸ்ரீ சித்ரா இந்து மத நூலகம் அமைக்கப்பட்டது. இங்கு அரிய பல புத்தகங்கள் உள்ளன. இப்போது இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த நூலகம் பல ஆண்டுகளாக பூட்டியே கிடக்கிறது. இந்த நிலையில், நூலகத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என கன்னியாகுமரி மாவட்ட இந்துக் கோயில் கூட்டமைப்பினர் நூலகத்துக்குள் சென்று இன்று தர்ணா போராட்டம் நடத்தினர். போராட்டம் குறித்து இந்துக் கோயில் கூட்டமைப்புத் தலைவர் சுவாமி சைதன்யானந்தஜி மஹராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், ``திருவிதாங்கூர் மன்னராக இருந்த சித்திரைத் திருநாள் மஹாராஜ காலத்தில் இந்த நூலகம் நிறுவப்பட்டது.

நூலகம்

இங்கு நூற்றுக்கணக்கான அரியவகை நூல்கள் உள்ளன. கிருபானந்தவாரியார் போன்ற ஆன்மிக பெரியோர்கள் இந்த நூலகத்தில் அமைந்துள்ள கூட்ட அரங்கில் பேசியுள்ளனர். வரலாற்றுச் சிறப்புமிக்க நூலகத்தை உடனடியாக திறக்க வேண்டும். நூல்நிலைய வளாகத்தில் உள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்ற வேண்டும் என வலியுறுத்திப் போராட்டம் நடத்துகிறோம்" என்றார். அவர்களிடம் இந்து சமய அறநிலையத்துறை நாகர்கோவில் தொகுதி கண்காணிப்பாளர் ஜீவானந்தம் பேச்சுவார்த்தை நடத்தி நூலகத்தை திறக்க நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார். இதையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.