விடுதலைப் போராட்ட வீரர் ரோசாப்பூ துரை பிறந்த நாளைக் கொண்டாடிய மதுரை மக்கள்..!

ரோசாப்பூ துரை என்று அழைக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர் ஜார்ஜ் ஜோசப்பின் 137-வது பிறந்ததின கொண்டாட்டம் நேற்று மதுரையில் பல்வேறு அமைப்புகளால் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

ஜான் மோசஸ்

பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் மதுரையில் விடுதலை இயக்கம் தீவிரமாக செயல்படக் காரணமாக இருந்தவர் ஜார்ஜ் ஜோசப். கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட இவர் பாரிஸ்டர் பட்டம் பெற்று மதுரையில் வழக்கறிஞராக பணியாற்றி விடுதலைப் போராட்டத்தில் கலந்துகொண்டார்.

பத்திரிகை ஆசிரியராக இருந்த அவர், பட்டியலின மக்களுக்காக ஆலய நுழைவுப் போராட்டம் நடத்தியவர். மகாத்மா காந்தி, நேருவுடன் நெருக்கமானத் தலைவராக திகழ்ந்தவர். அந்தக் காலகட்டத்தில் மிகவும் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்ட பட்டியலின மக்களின் நலனுக்காக கைரேகை சட்டத்துக்கு எதிராகவும்,  பல சமூகப் பிரச்னைகளுக்காகவும் சட்டப் போராட்டம் நடத்தியவர். அதனால்தான் எளிய மக்கள் இவரை ரோசாப்பூ துரை என்று அன்பாக அழைத்தார்கள். அப்படிப்பட்ட தலைசிறந்த தலைவரான ஜார்ஜ் ஜோசப்பின் 137-வது பிறந்த தினத்தை மதுரை மக்கள் ஒவ்வோர் ஆண்டும்  சிறப்பாகக் கொண்டாடி வருகிறார்கள்.

இன்று அவருடைய சிலைக்கு மதச்சார்பற்ற ஜனதாதளத்தின் தமிழக பொதுச்செயலாளர் ஜான் மோசஸ் கட்சி நிர்வாகிகளுடன் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதேபோல் பல்வேறு அமைப்புகள் பல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!