பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து திருச்சியில் இரு சக்கர வாகனத்துக்கு மாலையிட்டு அஞ்சலி

பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து இரு சக்கர வாகனத்துக்கு மாலையிட்டு அஞ்சலி செலுத்தி போராட்டம் நடைபெற்றதால் பரபரப்பு நிலவியது.

பெட்ரோல்

பெட்ரோல், டீசல் விலை எப்போதும் இல்லாத அளவில் அதிகரித்து வருகிறது. கடந்த 4 வருடங்களில் இல்லாத அளவுக்கு விலை உயர்வு அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் எதிர்ப்பலைகள் உருவாகி வருகின்றன. இந்நிலையில், நேற்று திருச்சி மரக்கடை ராமகிருஷ்ணா பாலம் அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் 20-க்கும் மேற்பட்டோர் கூடி நின்று, இரு சக்கர வாகனத்தைக் கீழே சாய்த்துப் போட்டு மாலை அணிவித்தபடி பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

அடுத்து அங்கே பானையுடன் நின்ற ஒருவர், இறந்தவருக்கு அஞ்சலி செலுத்துவதைப் போல் சுற்றி வந்தார். மத்திய அரசே, மாநில அரசே! பெட்ரோல் விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்து, எரிபொருள் விலையேற்றத்தால் விலைவாசி ராக்கெட்டைப்போல் ஏறுகிறது என முழங்கினர். பெட்ரோல் விலை உயர்த்தியவருக்கு அஞ்சலி செலுத்துகிறோம் என போராட்டக்காரர்கள் முழங்கினர். இந்தப் போராட்டத்தால் திருச்சியில் புதிய பரபரப்பு உண்டானது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!