வெளியிடப்பட்ட நேரம்: 08:00 (06/06/2018)

கடைசி தொடர்பு:08:00 (06/06/2018)

எம்.எல்.ஏ சக்கரபாணி வெற்றிக்கு எதிரான வழக்கு..! உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி உத்தரவு

ஒட்டன்சத்திரம் தொகுதியில் தி.மு.க எம்.எல்.ஏ சக்கரபாணி வெற்றிப்பெற்றது செல்லும் என உயர்நீதிமன்ற கிளை உத்தரவு.

உயர் நீதிமன்ற மதுரை கிளை

ஒட்டன்சத்திரம் தொகுதியில் தி.மு.க எம்.எல்.ஏ சக்கரபாணி வெற்றிப்பெற்றது செல்லும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் 2016-ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தொகுதியில் தி.மு.க வேட்பாளராக போட்டியிட்ட சக்கரபாணி வெற்றி பெற்றார். இவரது வெற்றியை எதிர்த்து அந்தத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த அ.தி.மு.க வேட்பாளரின் சகோதரர் கருப்பசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் சக்கரபாணி தேர்தலில் முறைகேடு செய்து வெற்றி பெற்றுள்ளார். இதனால் அவரது வெற்றியை ரத்து செய்ய வேண்டும். அவர் வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என கருப்பசாமி கூறியிருந்தார்.

இந்த மனுவை சென்னையில் நீதிபதி எம்.வி.முரளிதரன் விசாரித்து தீர்ப்பை ஒத்திவைத்தார். தற்போது உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் உள்ள நீதிபதி எம்.வி.முரளிதரன் கருப்பசாமியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அந்த உத்தரவில், இந்த வழக்கில் மனுதாரர் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரம் இல்லாமல் பொத்தாம் பொதுவானதாக உள்ளது. இதையேற்க முடியாது. ஒட்டன்சத்திரம் தொகுதியில் தி.மு.க எம்.எல்.ஏ சக்கரபாணி வெற்றி பெற்றது செல்லும்' என நீதிபதி கூறியுள்ளார்.