மாணவர்களைத் துப்புரவு பணி செய்யவைத்த அவலம்..! ஆட்சியரிடம் விளக்கம் கேட்ட உயர் நீதிமன்றம்

விருதுநகர் மாவட்டம் இனாம்ரெட்டியபட்டியைச் சேர்ந்த விஜயலட்சுமி உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில்,

விருதுநகர் மாவட்டம் இனாம்ரெட்டியபட்டியைச் சேர்ந்த விஜயலட்சுமி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அதில், 'கூலி வேலை பார்த்துவரும் எனக்கு குழந்தைகள் உள்ளன. எனது மகள் தனலட்சுமி இனாம்ரெட்டியபட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்தப் பள்ளியில் சோலைமலை என்பவர் துப்பரவு பணியாளராக உள்ளார். ஆனால், இவர் உயர் ஜாதியைச் சேர்ந்ததால் துப்புரவுப் பணிகளைக் கையாளுவது இல்லை.

அதற்குப் பதிலாக பட்டியலின வகுப்பைச் சேர்ந்த மாணவிகளைத் துப்புரவுப் பணிகளை மேற்கொள்ளச் செய்கிறார். பள்ளி கழிப்பறை மற்றும் ஆசிரியர்கள் கழிப்பறை, நீர்தேக்கத் தொட்டி ஆகியவற்றைச் சுத்தம் செய்யச் சொல்கிறார். இதுகுறித்து எனது மகள் என்னிடம் தெரிவித்தார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள் பிப்ரவரி 13-ம் தேதி பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டோம். ஆனால், பள்ளி நிர்வாகம் உரிய விளக்கம் அளிக்கவில்லை.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், நடவடிக்கை எடுக்கவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் போராட்டமும் செய்தனர். போராட்டம் நடத்த வேண்டாம் என பள்ளி நிர்வாகம் கேட்டுக்கொண்டது. இந்த நிலையில், பிப்ரவரி 14-ம் தேதி சூலக்கரை காவல்துறையினர் மாணவர்கள் நிதின் விஜய், ஊமைராஜ் மற்றும் எங்கள் கிராமத்தைச் சேர்ந்த ஜோதிராஜ் ஆகியோரை கைது செய்தனர். ஒரு காவலரின் ஹெல்மெட் காணவில்லை என்பதற்காக கைது செய்ததாக போலீஸார் தெரிவித்தனர். இந்த நிலையில் துப்புரவுப் பணியாளர் இடமாற்றம் செய்யப்பட்டார்.

அந்த துப்புரவுப் பணியாளருக்கு ஒரே நாளில் இரண்டு இடங்களுக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளனர். எனது மகள் தனலட்சுமி மற்றும் மற்ற மாணவர்கள் பிரைட்சன், பார்த்திபன், பாண்டியராஜன், பானுமதி, ஜனபிரியா, மீனாட்சி, முத்துகுடும்பன், ஐஸ்வர்யா உள்ளிட்ட மாணவ மாணவியர் பள்ளி வாளாகம் மற்றும் கழிப்பறைகளை சுத்தம் செய்ய கட்டாயப்படுத்தினர். எனவே, இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி தொடர்புடைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க உரிய உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இதுகுறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், காவல்துறை எஸ்.பி ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 20-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!