அ.தி.மு.க முன்னாள் அமைச்சருக்கு 5 ஆண்டு சிறை!

சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்திக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

சொத்துக்குவிப்பு


1991 - 1996 வரை அமைச்சராக இருந்தவர் சத்தியமூர்த்தி.  அந்த காலகட்டத்தில் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க ஆட்சியில் இருந்தது. வருவாய்த் துறை அமைச்சராக இருந்த சத்தியமூர்த்தி மீது வருமானத்துக்கு அதிகமாக ரூ.83 லட்சம் ரூபாய் சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கின் விசாரணை, பல ஆண்டுகளாக இழுபறி நிலையில் நடந்து வந்தது.

இந்நிலையில், இவ்வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. சத்தியமூர்த்தி மீதான குற்றச்சாட்டு உறுதியான நிலையில், அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை  வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேபோன்று சத்தியமூர்த்தியின் மனைவி சந்திராவுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. மேலும், இருவருக்கும் தலா ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!