வெளியிடப்பட்ட நேரம்: 12:55 (06/06/2018)

கடைசி தொடர்பு:12:55 (06/06/2018)

`மாணவ மணிகளே விபரீத முடிவு வேண்டாம்' - பிரதீபா குடும்பத்துக்கு நிதியுதவி வழங்கி முதல்வர் வேண்டுகோள்

``நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவி பிரதீபா குடும்பத்துக்கு ரூ.7 லட்சம் நிதி உதவி வழங்கப்படும்'' என  முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

பிரதீபா

மருத்துவப்படிப்பில் சேர்வதற்கான நீட்  தேர்வின் முடிவுகள் கடந்த திங்கட்கிழமையன்று வெளியாகியது. இதில் தோல்வியை தழுவியதால்  விழுப்புரம் மாவட்டம் செஞ்சியைச் சேர்ந்தவர் பிரதீபா என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில், தற்கொலை செய்துகொண்ட மாணவி பிரதீபா குடும்பத்துக்கு 7 லட்சம் நிதி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் மாணவர்கள் யாரும் தற்கொலை செய்துகொள்ளவேண்டாம் என கூறிய முதல்வர் இதுபோன்ற செயல்களை மாணவ மணிகள் தவிர்க்க வேண்டும் என வேண்டுகொள் விடுத்தார். இந்த அறிவிப்பை வரவேற்றுப் பேசிய ஸ்டாலின், `நிதி உதவியுடன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்' என கோரிக்கைவிடுத்துள்ளார்.