வெளியிடப்பட்ட நேரம்: 13:15 (06/06/2018)

கடைசி தொடர்பு:13:15 (06/06/2018)

`மலையை அழிக்கும் திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்'- கொந்தளிக்கும் காங்கிரஸ்

கன்னியாகுமரி மாவட்ட மலை வளங்களை அழித்து கேரள மாநிலம் விழிஞ்ஞத்தில் வர்த்தக துறைமுகம் அமைக்க பாறைக் கற்கள் அனுப்ப காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ன்னியாகுமரி மாவட்ட மலை வளங்களை அழித்து கேரள மாநிலம் விழிஞ்ஞத்தில் வர்த்தக துறைமுகம் அமைக்க பாறைக் கற்கள் அனுப்ப காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

கலெக்டர் அலுவலகத்தில் காங்கிரஸ் மனு

கேரள மாநிலம் விழிஞ்ஞத்தில் அதானி குழுமம் சார்பில் வர்த்தக துறைமுகம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. துறைமுக கட்டுமானப்பணிக்காக இயற்கையை அழித்து கனிமவளங்களை எடுக்கக்கூடாது என கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து மலைகளை உடைத்து பாறாங்கற்களை மிதவைக் கப்பல்களில் விழிஞ்ஞம் துறைமுகத்துக்கு கொண்டுசெல்ல திட்டமிடப்பட்டுள்ளது. மிதவைக் கப்பல்கள் வந்துசெல்ல தேங்காப்பட்டணம் துறைமுகத்தைப் பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், குமரி மாவட்ட மலைகளை அழிக்க எதிர்ப்பு தெரிவித்து குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து காங்கிரஸ் மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் கூறும்போது, ``கன்னியாகுமரி மாவட்ட மலைகளை உடைத்து 36 லட்சம் டன் பாறைக் கற்களை விழிஞ்ஞத்துக்கு எடுத்துச்செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. மாவட்டத்தின் மலைவளம் அழிக்கப்பட்டால் மழை அளவு குறையும், காலநிலையில் மாற்றம் ஏற்படும். தமிழக அரசும் கேரள அரசும் கூட்டு சேர்ந்து குமரி மலை வளத்தை அழிக்க திட்டமிடுகின்றன. மலையை அழிக்கும் திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்" என்றார்.