`தி.மு.க-வுடன் கூட்டணியா?' - கேள்வியால் கொந்தளித்த தினகரன்

`தி.மு.க-வுடன் கூட்டணி வைப்பது தற்கொலைக்குச் சமமானது’ என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

தினகரன்

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவை இன்று டி.டி.வி.தினகரன் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பில், தற்போதைய அரசியல் சூழல்குறித்தும் கட்சியில் நிலவும் பிரச்னைகள் குறித்தும் பேசப்பட்டதாகத் தெரிகிறது. இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க-வுடன் கூட்டணியா என்ற செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த அவர், தி.மு.க-வுடன் கூட்டணி வைப்பது என்பது தற்கொலைக்குச் சமமானது  என்று காட்டமாகக் கூறினார். மேலும், மதவாத கட்சியான பாரதிய ஜனதா கட்சியுடனும் கூட்டணி அமைக்க முடியாது என அவர் உறுதிபடத் தெரிவித்தார். 

இதனிடையே, டி.டி.வி.தினகரன் தி.மு.க-வுடன் ரகசிய உடன்பாடு வைத்திருப்பதாகவும் இருவரும் இணைந்து செயல்படுவதாகவும் அமைச்சர் ஜெயகுமார் குற்றம்சாட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!