வெளியிடப்பட்ட நேரம்: 19:20 (06/06/2018)

கடைசி தொடர்பு:19:20 (06/06/2018)

ஜெருசலேம் நகருக்குள் மெஸ்சி நுழைய எதிர்ப்பு... இஸ்ரேல் - அர்ஜென்டினா பயிற்சி ஆட்டம் ரத்து

இஸ்ரேல் - அர்ஜென்டினா பயிற்சி ஆட்டம் ரத்து

ஜெருசலேம் நகருக்குள் மெஸ்சி நுழைய எதிர்ப்பு... இஸ்ரேல் - அர்ஜென்டினா பயிற்சி ஆட்டம் ரத்து

ர்ஜென்டினா கேப்டன் லியோனல் மெஸ்சி ஜெருசலேம் நகருக்குள் விளையாடுவதை எதிர்த்து பாலஸ்தீனர்கள் போராட்டம் அறிவித்துள்ளனர். இதனால், இஸ்ரேல் - அர்ஜென்டினா அணிகளுக்கிடையேயான உலகக் கோப்பை பயிற்சி ஆட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

மெஸ்சிக்கு எதிர்ப்பு பயிற்சி ஆட்டம் ரத்து

ஜெருசலேம் நகரில் சனிக்கிழமை நடைபெறவிருந்த இந்த ஆட்டத்தில் மெஸ்சி விளையாடக் கூடாது என்று பாலஸ்தீனம் போர்க்கொடி தூக்கியது. ரமலவாவில் செய்தியாளர்களிடம் பேசிய பாலஸ்தீன கால்பந்து சங்கத் தலைவர் ஜிப்ரில் ரஜுப், ``இந்தப் போட்டியில் மெஸ்சி விளையாடக் கூடாது. மீறி விளையாடினால் அவருக்கு எதிராகப் போராடுவோம். அர்ஜென்டினா கேப்டனின் 10-ம் எண் ஜெர்சியைத் தீயிட்டு கொளுத்துவோம்'' என்று எச்சரிக்கை விடுத்தார். முன்னதான அர்ஜென்டினா அரசுக்கு ரஜுப் எழுதிய கடிதத்தில், ''இந்தக் கால்பந்து ஆட்டத்தை இஸ்ரேல் அரசியல்ரீதியாகப் பயன்படுத்தக் கூடும். மெஸ்சி, அன்பு மற்றும் சமாதானத்துக்கு உதாரணமாகக் காட்டப்படும் கால்பந்து வீரர். எனவே, ஜெருசலேத்தில் நடக்கவுள்ள இந்த ஆட்டத்தில் அவர் பங்கேற்கக் கூடாது'' என்றும் கூறியிருந்தார். 

இஸ்ரேல் நாட்டின் தலைநகராக டெல்அவிவிலிருந்து வந்தது. சில மாதங்களுக்கு முன், ஜெருசலேம் இஸ்ரேலின் தலைநகரம் என்று அமெரிக்கா அறிவித்தது. பழைமையான இந்த நகரத்தை பாலஸ்தீனமும் உரிமை கொண்டாடி வருகிறது. இந்நிலையில், ஜெருசலேமில் உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தை நடத்திக்காட்டி உலக நாடுகளின் நம்பிக்கையைப் பெறலாம் என்று இஸ்ரேல் அரசு திட்டமிட்டது. 

ஜெருசலேமுக்கு மெஸ்சி வருவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து போட்டி ரத்து செய்யப்படுவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க