`சென்னையின் வெப்பத்தைத் தணித்த மழை!’ - மகிழ்ச்சியில் மக்கள் #ChennaiRains

சென்னை நகரின் பல இடங்களில் இன்று பரவலாக மழை பெய்தது. இதனால், கோடை வெப்பத்தில் தவித்துக்கொண்டிருந்த மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

மழை

கோடைக்காலம் முடிந்து, தற்போது தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ளது என வானிலை மையம் சமீபத்தில் அறிவித்தது. இதனால், தமிழகத்தின் பிற பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, பருவ மழை தொடங்கியதை அடுத்து, தமிழகத்தின் பல பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்தாலும், வெயிலும் கொளுத்தியது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான வெயில் நிலவியது. இதனால் மக்கள் அவதிக்குள்ளாகிவந்தனர்.

கடந்த இரண்டு தினங்களாக சென்னையின் சில பகுதிகளில் சாரல் மழை பெய்துவந்தது. இந்த நிலையில், சென்னையின் பல இடங்களில் பரவலாக மழை பெய்தது. இன்று பிற்பகல் நேரத்தில், சென்னை எழும்பூர், அண்ணா சாலை, தி.நகர், தேனாம்பேட்டை, மூலக்கடை, பெரம்பூர், மேடவாக்கம், போரூர், பூவிருந்தவல்லி, காட்டுப்பாக்கம், மாங்காடு, வேளச்சேரி, எண்ணூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது.

மழை

 மயிலாப்பூர், சாந்தோம் ஆகிய பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. தொடர்ந்து மழை பெய்வதற்கான காலநிலையும் நிலவுகிறது. இதனால், சென்னை வாசிகள் வெயிலின் தாக்கத்திலிருந்து சற்று நிம்மதியடைந்துள்ளனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!