மத்திய அமைச்சர் நிதின் கட்கரியுடன் அ.தி.மு.க எம்.பி-க்கள் சந்திப்பு..!

காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பது தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவை உடனடியாக அரசிதழில் வெளியிட நடவடிக்கை எடுத்ததற்காக மத்திய நீர் வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை அ.தி.மு.க எம்.பி-க்கள் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். 

நிதின்கட்கரி

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை செயல்படுத்துவதற்கான காவிரி மேலாண்மை ஆணையத்தை நடப்பு தென்மேற்குப் பருவமழை தொடங்குவதற்குள் அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் குறித்த உச்ச நீதிமன்றத்தின் அறிவிப்பு கடந்த 1-ம் தேதி மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், நேற்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தலைமையில் அ.தி.மு.க எம்.பி-க்கள் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை நேரில் சந்தித்து, காவிரி மேலாண்மை வாரியம் குறித்த அறிவிப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டதற்கு நன்றி தெரிவித்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!