வெளியிடப்பட்ட நேரம்: 02:53 (07/06/2018)

கடைசி தொடர்பு:07:08 (07/06/2018)

நிர்மலாதேவிக்கு நான்காவது முறையாக ஜாமீன் நிராகரிப்பு..!

பேராசிரியை நிர்மலாதேவியின் ஜாமீன் மனு, நான்காவது முறையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி மாணவிகளை தவறான வழியில் செல்ல வற்புறுத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்குப்பின் மதுரை சிறையில் இருந்து வருகிறார். இதே வழக்கில் மதுரை காமராசர் பல்கலைக்கழக உதவிப்பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். 

நிர்மலா தேவி

இவர்களுடனயே நிறுத்தப்பட்ட வழக்கு விசாரணை அடுத்து என்ன ஆனது என்று தெரியவில்லை. ஆளுநர் நியமித்த சந்தானம் குழுவினரின் விசாரணையும் முடிந்துவிட்டது. நிர்மலாதேவி ஏற்கெனவே மூன்று முறை ஜாமீன் கேட்டும் அவருடைய மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், நேற்று மீண்டும் நான்காவது முறையாக ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார். அதை விசாரித்த விருதுநகர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி முத்துசாரதா மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதே நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு  முருகன், கருப்பசாமி செய்த மனுக்கள் நேற்றைக்கு முந்தைய நாள் தள்ளுபடி செய்யப்பட்டது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க