காவிரி மேலாண்மை ஆணையத் தலைவராக மசூத் ஹூசைன் நியமனம்..!

காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவராக மத்திய நீர்வள ஆணையராகவுள்ள மசூத் உசேன் நியமிக்கப்பட்டுள்ளார். 

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை செயல்படுத்துவதற்கான காவிரி மேலாண்மை ஆணையத்தை நடப்பு தென்மேற்குப் பருவமழை தொடங்குவதற்குள் அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், ஜூன் 1-ம் தேதி இதுகுறித்து அறிவிப்பை மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது.

இந்தநிலையில், தமிழக அரசின் அதிகாரிகளாக பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் மற்றும் மாநில நீர்வளத்துறை தலைமைப் பொறியாளர் செந்தில்குமார் ஆகியோரது பெயர்கள்  பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் நடக்க உள்ள நிலையில், ஆணையத்தின் தலைவராக மசூத் உசைன் நியமிக்கப்பட்டுள்ளார். மசூத் உசைன் தற்போது மத்திய நீர்வளத்துறை ஆணையத்தின் தலைவராக உள்ளார். இந்தத் தகவலை மத்திய நீர் வளத்துறை செயலாளர் யு.பி.சிங் தெரிவித்துள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!