வெளியிடப்பட்ட நேரம்: 10:30 (07/06/2018)

கடைசி தொடர்பு:10:30 (07/06/2018)

கலாம் வழியில் ராம்நாத் கோவிந்த் - குடியரசுத் தலைவர் மாளிகையில் மதம் சார்ந்த நிகழ்ச்சிகள் ரத்து

கலாம் வழியில் ரமலான் விருந்தை ரத்து செய்துள்ளார் குடியரசுத் தலைவர்.

கலாம் வழியில் ராம்நாத் கோவிந்த் - குடியரசுத் தலைவர் மாளிகையில் மதம் சார்ந்த நிகழ்ச்சிகள் ரத்து

இனி குடியரசுத் தலைவர் மாளிகையில் எந்த மதம் சார்ந்த நிகழ்ச்சிகளும் நடைபெறக்கூடாது என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.

ராம்நாத்

மலான் மாதத்தில் குடியரசுத் தலைவர் மாளிகையில் 'இப்தார்' விருந்தளிப்பது பாரம்பர்யமான நிகழ்வு. கடந்த 2002-ம் ஆண்டு முதல் அப்துல் கலாம் குடியரசுத் தலைவராக  இருந்த 5 ஆண்டுகளிலும் ஒரு முறை கூட இப்தார் விருந்து அளித்ததில்லை. மாறாக விருந்துக்கு ஆகும் செலவுத் தொகையை ஆதரவற்றோர் இல்லத்துக்கு வழங்குவதை கலாம் வழக்கமாகக் கொண்டிருந்தார். இப்தார் விருந்துக்கு ஒவ்வோர் ஆண்டும் 22 லட்ச ரூபாய் குடியரசுத் தலைவர் மாளிகையில் செலவிடப்படும். அந்தத் தொகையுடன் அப்துல் கலாம் தன் சொந்தப்பணம் ஒரு லட்ச ரூபாய் சேர்த்து, 23 லட்ச ரூபாயை ஆதரவற்றோர் இல்லத்துக்குப் பிரித்து அளித்து விடுவார். 

அப்துல் கலாம் பாணியில் தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும் மதம் சார்ந்த நிகழ்ச்சிகள், விழாக்களை குடியரசுத் தலைவர் மாளிகையில் கொண்டாட வேண்டாமென்று உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில், குடியரசுத் தலைவர் மாளிகையில் இப்தார் விருந்து ரத்து செய்யப்பட்டுள்ளது.  மேலும், மக்கள் வரிப்பணத்தில் மதம் சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்துவதில் குடியரசுத் தலைவருக்கு உடன்பாடு இல்லை என்று சொல்லப்படுகிறது. தீபாவளி, கிறிஸ்துமஸ், ஹோலி பண்டிகைகளும் குடியரசுத் தலைவர் மாளிகையில் கொண்டாட வேண்டாம்  என்று அவர் முடிவு எடுத்துள்ளதாகச் செயலாளர் (செய்திப்பிரிவு) அசோக் மாலிக் தெரிவித்துள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க