சம்பள உயர்வு தேவையில்லை! - ஆச்சரியப்படுத்திய ஆளுநர்

சம்பள உயர்வை ஏற்க மறுத்த ஆளுநர்

சம்பள உயர்வு தேவையில்லை! -  ஆச்சரியப்படுத்திய ஆளுநர்

ட்டீஸ்கர் மாநில ஆளுநராக பல்ராம் தாஸ் தாண்டன் இருந்து வருகிறார். மிகவும் எளிமையான மனிதரான இவர் கவர்னர் மாளிகையில் ஆடம்பரச் செலவுகளை அனுமதிப்பதில்லை. அநாவசியச் செலவுகளையும் கட்டுப்படுத்தினார். கடந்த மார்ச் மாதத்தில் நாட்டின் அனைத்து ஆளுநர்கள், துணை நிலை ஆளுநர்களுக்கு சம்பள உயர்வு அளிக்கப்பட்டது. ரூ.1.10 லட்சமாக இருந்த சம்பளம் ரூ.3.50 லட்சமாக உயர்த்தப்பட்டது. அதோடு, 2016-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து இந்த சம்பள உயர்வு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 26 மாதங்கள் சம்பளம் நிலுவைத் தொகையுடன் ஆளுநர்களுக்கு அளிக்கப்பட்டது. 

பல்ராம் தாஸ் தாண்டன்

நாட்டில் உள்ள அனைத்து மாநில ஆளுநர்களும் இந்த சம்பள உயர்வை மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டனர். ஒருவருக்கு மட்டும் சம்பள உயர்வு மனசாட்சியை உறுத்தியது. அந்த ஆளுநர்தான் பல்ராம் தாஸ் தாண்டன். இதைத்தொடர்ந்து சட்டீஸ்கர் மாநில கணக்குப்பிரிவு தலைவருக்கு, `பழைய ஊதியமே தனக்குப் போதுமானது. சம்பள உயர்வு தேவையில்லை' என்று பல்ராம் தாஸ் தாண்டன் கடிதம் எழுதினார். அவரின் கோரிக்கை ஏற்கப்பட்டது. தொடர்ந்து அவருக்கு பழைய சம்பளமான ரூ.1.10 லட்சமே வழங்கப்பட்டு வருகிறது.

பஞ்சாப்பைச் சேர்ந்த இவர் முன்னதாக பாரதிய ஜனதா கட்சியில் இருந்தார். நல்ல ஆளுநருக்கு உதாரணமாகியுள்ள இவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!