தூத்துக்குடி செல்கிறார் எடப்பாடி பழனிசாமி!

துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க நாளை மறுநாள் தூத்துக்குடி செல்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க நாளை மறுநாள் தூத்துக்குடி செல்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

எடப்பாடி பழனிசாமி

ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கடந்த மாதம் 22-ம் தேதி தூத்துக்குடியில் போராட்டம் நடைபெற்றது. அப்போது போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.  இந்தச் சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பினர் இதற்குக் கண்டனம் தெரிவித்தனர். இதனிடையே, துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு 20 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டது. துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கடந்த 28-ம் தேதி நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். மேலும், '144 தடை காரணமாகத்தான் அங்கு செல்லவில்லை' என முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்கெனவே விளக்கமளித்திருந்தார். இந்நிலையில், துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்ட மக்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை மறுநாள் நேரில் சென்று ஆறுதல் அளிக்க உள்ளார்.
 

இதனிடையே தூத்துக்குடி சம்பவம் குறித்து பேரவையில் பேசிய முதல்வர், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரம் குறித்து விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றுவருவதாகவும், நீதிமன்றத்தில் வழக்கிருப்பதால் அதுகுறித்து சபையில் பேசுவது மரபு அல்ல என்று தெரிவித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!