பிறந்த குழந்தையைத் தெருவில் எறிந்துவிட்டுச் சென்ற பெண் #ShockingVideo

காரில் இருந்தபடியே ஒரு பெண் பிறந்த குழந்தையை தெருவில் விட்டுச் செல்லும் காட்சிகள் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகி வைரலாகி வருகிறது. 

குழந்தையை


உத்தரப்பிரதேசம் மாநிலம், முசாபர்நகரில் உள்ள சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  வீடியோ தொடங்கும்போது, முசாபர் நகரில் உள்ள ஒரு சிறிய தெருவில் யாரும் இல்லை. அப்போது அந்த வழியாக ஒரு கார் மட்டும் உள்ளே நுழைகிறது. அது ஒரு வீட்டு வாசலின் முன் நிற்கிறது. பின் தன் முகத்தை மூடியபடி ஒரு பெண், காரின் கதவைத் திறந்து பிறந்த குழந்தையை அந்த வீட்டு வாசல் முன் வைத்துவிடுகிறார். அடுத்த நிமிடம் கார் புறப்பட்டுச் சென்று விடுகிறது. இந்தக் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

பிறகு குழந்தையை மீட்டு அப்பகுதி மக்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். குழந்தை குறித்துப் பேசிய அம்மாவட்டத்தின் தலைமை மருத்துவ அதிகாரி, ``குழந்தை இன்னும் ஆபத்தான நிலையில்தான் உள்ளது. குழந்தை நலம் பெற எங்களால் முடிந்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். குழந்தை விரைவில் குணமடையும் என நம்புகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.” 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!