2019ல் இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு!

அடுத்தாண்டு ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

அடுத்தாண்டு ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 

மாநாடு


கடந்த 2015-ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் கலந்துகொண்டனர். 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதில் 2.42 லட்சம் கோடி அளவில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்தான ஒப்பந்தங்களுக்கான பணிகள் நடைபெற்றுவருகிறது.

இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்துவது குறித்து அரசு பரிசீலித்து வந்த நிலையில், அதற்கான அறிவிப்பு இன்று நடைபெற்ற மானியக்கோரிக்கைகான கொள்கை விளக்க புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. அதன்படி இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 23-24 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டின் செலவினங்களுக்காக ரூபாய் 73 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட செலவுகளுக்காக முகமை நிறுவனமான தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்துக்கு 1 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் வழங்கப்பட்டுள்ள கொள்கை விளக்க குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், தென்கொரியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு அழைப்புவிடுக்கப்பட உள்ளது. மேலும், மேலே குறிப்பிட்ட நாடுகள் தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்குண்டான வாய்ப்புகளை விளக்குவதற்கான கருத்தரங்குகளும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!