வெளியிடப்பட்ட நேரம்: 20:20 (07/06/2018)

கடைசி தொடர்பு:15:29 (17/06/2018)

'ரெயின்கோட் அணிய நேரமில்லை' - கொட்டும் மழையில் காவலரின் 2 மணி நேர பணி #ViralVideo

இரண்டரை மணி நேரமாக மழையில் நனைந்தபடி போக்குவரத்து காவலர் ஒருவர் போக்குவரத்தை சீர்செய்த காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது

இரண்டரை மணி நேரமாக மழையில் நனைந்தபடியே, போக்குவரத்துக் காவலர் ஒருவர் போக்குவரத்தை சீர்செய்த காட்சிகள், சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது.

 

traffic police


மும்பையில், பருவமழை தொடங்கி பெய்துவருகிறது. மும்பை கன்டிவில் பகுதியிலுள்ள அகுர்லி சாலையில், நந்தகுமார் இங்கல் என்ற போக்குவரத்துக் காவலர் போக்குவரத்தை சீர்செய்துகொண்டிருந்தார். இரவு 8 மணி அளவில் எதிர்பாராத விதமாக மழை பெய்து, சாலைகளில் தண்ணீர் வழிந்தோடியது. மழை பெய்தும் சாலையை விட்டு அகலாமல், கொட்டும் மழையில் நனைந்தபடியே, ரெயின் கோட் கூட அணியாத அந்தக் காவலர், போக்குவரத்தை சரிசெய்தார். சுமார் இரண்டரை மணி நேரத்துக்கும் மேலாகப் பெய்த மழையில் நனைந்துகொண்டு, வாகன நெரிசல் ஏற்படாதவண்ணம் தன் பணியில் தீவிரமாக ஈடுபட்டுவந்தார். இது தொடர்பாகப் பேசிய அவர், மழை பெய்தபோது சாலையில் வாகன நெரிசல் காணப்பட்டதால், சாலைவிட்டு அகலமுடியாத சூழல் இருந்தது. மேலும், ரெயின் கோட் உள்ளிட்ட பாதுகாப்பு ஆடைகள் அணிய நேரமில்லை. தொலைபேசியை மட்டும் பாக்கெட்டில் வைத்துவிட்டு எனது பணியை கவனித்து வந்தேன். இவ்வாறு நந்தகுமார் இங்கல் தெரிவித்தார். சாலையில் மரம் முறிந்துவிழுந்ததால், அதை சரிசெய்துவிட்டு வீடு திரும்ப 11:30 மணிக்கு மேல் ஆகிவிட்டதாக அவர் கூறினார்.

 

 

 அதைப் படமெடுத்த ஒருவர், சமூகவலைதளங்களில் பதிவேற்றியுள்ளார். முகப் புத்தகத்தில் தொடர்பில்லாத அந்தக் காவலர்க்கு வைரலாகி வரும் வீடியோகுறித்துத் தெரியவில்லை. மேலதிகாரி அவரை அழைத்துப் பாராட்டியதையடுத்து, நந்தகுமாருக்கு இந்த வீடியோகுறித்த தகவல் தெரியவந்தது. போக்குவரத்துக் காவலராகக் கடந்த 23வருடங்களாக அவர் பணியாற்றிவருவது குறிப்பிடத்தக்கது.