வாடகைக்கு இருக்கும் பெண்ணின் செல்போனைத் திருடிய ஓனர் மகன் 

செல்போனைத்


 
சென்னையில், வாடகைக்குக் குடியிருக்கும் பெண்ணின் செல்போனை வீட்டு உரிமையாளரின் 17 வயது மகன் திருடியுள்ளார். குட்டு வெளிப்பட்டதால், செல்போனை உடைத்தெறிந்தார். 

சென்னை நீலாங்கரை பாரதியார் நகரைச் சேர்ந்தவர் நந்தினி. இவர், பிள்ளையார்கோயில் அருகில் உள்ள வீட்டில் வாடகைக்குக் குடியிருந்துவருகிறார். இந்த நிலையில், இவரின் விலை உயர்ந்த செல்போன் சில நாள்களுக்கு முன் திருடு போனது. அதைப் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்த நிலையில், வீட்டின் உரிமையாளரின் 17 வயது மகனின் கையில் தன்னுடைய செல்போன் இருந்ததைப் பார்த்து நந்தினி அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து அவரிடம் விசாரித்தார். அதற்கு வீட்டின் உரிமையாளரின் மகன், 'இந்த செல்போனை விலைக்கு வாங்கியதாகக் கூறியதோடு, உங்களுக்கு சந்தேகமிருந்தால் சோதித்துப் பாருங்கள்' என்று தெரிவித்தார். இதையடுத்து நந்தினி, அந்த செல்போனை சோதித்துப் பார்த்தார். அப்போது, அது தன்னுடைய செல்போன் என்று தெரியவந்தது. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரத்தில், நந்தினியை அவர் அடித்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், செல்போனை கீழே போட்டு உடைத்துள்ளார்.  இந்தச் சம்பவம்குறித்து நந்தினி நீலாங்கரை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் விசாரணை நடத்தி, வீட்டின் உரிமையாளரின் 17 வயது மகனை போலீஸார் கைதுசெய்தனர். 

 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!