வெளியிடப்பட்ட நேரம்: 21:40 (07/06/2018)

கடைசி தொடர்பு:21:40 (07/06/2018)

கன்னிப்பூ சாகுபடி சமயத்தில் விவசாயிகளுக்குக் கைகொடுக்கும் பருவமழை!

கன்னியாகுமரி மாவட்டத்தில் பருவமழை பெய்துவருவதால் கன்னிப்பூ சாகுபடி செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

ன்னியாகுமரி மாவட்டத்தில் பருவமழை பெய்துவருவதால், கன்னிப்பூ சாகுபடி செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

பருவமழை

கன்னியாகுமரி மாவட்டத்தில், கன்னிப்பூ நெல் சாகுபடி செய்யும் பணி நடந்துவருகிறது. இதற்காக, பெருஞ்சாணி அணை திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த சில நாள்களாக குமரி மாவட்டத்தில் பரவலாக பருவமழை பெய்துவருகிறது. இதனால், கடைவரம்புப் பகுதிகளிலும் நெல் பயிருக்காக வயல்களை உழுது பண்படுத்தும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். நேற்று முன் தின நிலவரப்படி, குமரி மாவட்டத்தில் 47 மி.மீ மழை பெய்துள்ளது. நேற்றைய நிலவரப்படி 66.20 மி.மீ மழைபெய்துள்ளது. இன்று காலை முதல் மாலை வரை மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. தொடர் மழை காரணமாக, கன்னிப்பூ சாகுபடி செய்யும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பருவமழை

மேலும், மாவட்டதில் உள்ள அணைகளுக்குத் தண்ணீர்வரத்து அதிகரித்துள்ளது. குளங்களிலும் தண்ணீர் நிரம்பிவருகிறது. மொத்தத்தில் இந்தப் பருவமழை, குமரி மாவட்ட விவசாயிகளுக்குக் கைகொடுக்கும் விதமாகப் பெய்துவருகிறது. இந்த நிலையில், மாவட்டம் முழுவதும் விளைநிலங்களுக்கு தண்ணீர் செல்லும் பெரும்பாலான சானல்கள் தூர் வாரப்படாமல் இருப்பதாகவும், விரைவில் தூர் வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.