அரசு அலுவலகங்களில் இங்க் பேனா மட்டுமே பயன்படுத்த வேண்டும் - கேரள அரசு அதிரடி உத்தரவு!

உலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்பட்டதை தொடர்ந்து கேரள அரசு அலுவலகங்களில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் ரீபில்களுக்கு பதில் இங்க் பேனா மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

லக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்பட்டதை தொடர்ந்து கேரள அரசு அலுவலகங்களில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் ரீபில்களுக்கு பதில் இங்க் பேனா மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

விழிப்புணர்வு நிகழ்ச்சி

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் பாலித்தீன் பைகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பிளாஸ்டிக் பொருட்கள் பன்பாட்டிலும் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதுபோன்று கேரள மாநிலத்திலும் பாலித்தீன் கவர்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த அரசு தடை விதித்துள்ளது. முதற்கட்டமாக அரசு அலுவலகங்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி அரசு அலுவலக வளாகத்தில் பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் கொண்டுசெல்லக்கூடாது, தண்ணீர் குடிக்க சில்வர் கப்புக்களை பயன்படுத்த வேண்டும், சாப்பிடுவதற்கும் சில்வர் தட்டையே பயன்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கெல்லாம் மேலாக ஒருமுறை பயன்படுத்திவிட்டு வீசி எறியும் பிளாஸ்டிக் ரீபில்கள் பயன்படுத்தக்கூடாது எனவும், நீண்ட நாட்கள் பயன்படுத்தும் இங்க் பேனாக்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. கேரள மாநில அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பத்மநாபபுரம் அரண்மனையிலும் இந்த உத்தரவு இன்று அமலுக்கு வந்தது. இதுகுறித்து அரண்மனை நிர்வாகம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!