காலா திரைப்படம் வெற்றிபெற நாகராஜருக்கு பாலபிஷேகம் செய்த ரசிகர்கள்..!

ரஜினியின் காலா திரைப்படம் வெற்றிபெற நாகர்கோவில் நாகராஜா கோவிலில் ரசிகர்கள் பாலபிஷேகம். செய்து வழிபட்டனர்.

ஜினியின் காலா திரைப்படம் வெற்றிபெற நாகர்கோவில் நாகராஜா கோவிலில் ரசிகர்கள் பாலபிஷேகம் செய்து வழிபட்டனர்.

நாகராஜருக்கு பாலபிஷேகம்

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள காலா திரைப்படம் இன்று தமிழகத்தில் வெளியானது. சமூக வலைத்தளங்களில் காலா-படத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு விமர்சனங்கள் வலம் வருகின்றன. காலா ரிலீசை அடுத்து ரஜினி ரசிகர்கள் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர். வழக்கமாக ரஜினியின் கட் அவுட்டுக்கு ரசிகர்கள் பாலபிஷேகம் செய்வது வழக்கம். வழக்கத்துக்கு மாறாக நாகர்கோவில் ரசிகர்கள் நாகராஜா கோவில் நாகராஜா சன்னதிக்கு பாலபிஷேகம் நடத்தி காலா வெற்றிபெற வேண்டும் என வேண்டிக்கொண்டனர்.

இதுகுறித்து ரஜினி மக்கள் மன்ற மாவட்ட துணைச்செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் கூறுகையில், "ரஜினி ஆன்மீக அரசியல் என அறிவித்ததால் நாங்கள் கோயிலுக்கு சென்று நாகராஜருக்கு பாலபிஷேகம் செய்து காலா வெற்றிபெற பிரார்த்தனை நடத்தினோம். காலா திரைப்படம் சரித்திர சாதனை படைக்க வேண்டும் என வேண்டிக்கொண்டோம்" என்றார். ஆர்வக்கோளாறு காரணமாக சிங்கப்பூர் தியேட்டரில் இருந்து காலா திரைப்படத்தை பேஸ்புக்கில் லைவ் செய்த ரசிகர் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!