வெளியிடப்பட்ட நேரம்: 01:45 (08/06/2018)

கடைசி தொடர்பு:01:45 (08/06/2018)

நிர்மலா தேவி விவகாரம்..! சி.பி.சி.ஐ.டி கோரிக்கைய நிராகரித்த நீதிமன்றம்

அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி

நிர்மலாதேவியை குரல் சோதனைக்காகச் சென்னைக்கு அழைத்து செல்ல அனுமதி கேட்ட சி.பி.சி.ஐ.டி.க்கு அனுமதி மறுத்து உத்தரவிட்டது விருதுநகர் நீதிமன்றம்.

அருப்புக்கோட்டை நிர்மலா

அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரிப் பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளைத் தவறான வழியில் பயன்படுத்த வற்புறுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது மதுரைப் பெண்கள் சிறையில் இருக்கிறார். உயர் கல்வித்துறையை கலங்கடித்த இந்த விவகாரம் தமிழகத்தையே அதிர வைத்தது. அதன் பின்பு இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.யும், ஆளுநர் நியமித்த விசாரணைக் குழுவும் விசாரித்தது. இந்த நிலையில் சிறையிலிருக்கும் நிர்மலாதேவி நான்குமுறை மனுச்செயதும் ஜாமீன் கிடைக்கவில்லை.

மாணவிகளிடம் செல்போனில் பேசியது நிர்மலாதேவியின் குரலா? என்பதை உறுதி செய்ய, நிர்மலாதேவியின் குரல் மாதிரியை எடுப்பதற்காக அவரை சென்னை மயிலாப்பூரில் உள்ள தடயவியல்துறை அலுவலகத்திற்கு அழைத்து செல்ல சி.பி.சி.ஐ.டியினர் விருதுநகர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அனுமதி கேட்டனர். அதை ஏற்க மறுத்த நீதிபதி, மதுரை மத்திய சிறையில் வைத்து நிர்மலாதேவியின் குரல் மாதிரியை எடுக்கவும் என்று உத்தரவிட்டார். ஆனால், அதை ஏற்றுக்கொள்ளாத சி.பி.சி.ஐ.டி. தரப்பு, நிர்மலாதேவியை சென்னை அழைத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று தொடர்ந்து  வாதம் செய்தனர். ஆனால் நீதிபதி மறுத்துவிட்டார். நிர்மலாதேவி அடுத்த வாய்தாவுக்கு நீதிமன்றத்தில் ஆஜராகும்போது மீண்டும் இந்தக் கோரிக்கையை சி.பி.சி.ஐ.டி.யினர் வைப்பார்கள்' என்று சொல்லப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க