வெளியிடப்பட்ட நேரம்: 13:00 (08/06/2018)

கடைசி தொடர்பு:13:00 (08/06/2018)

"மக்களுக்காகப் பாடுபடும் மு.க.ஸ்டாலின் முதல்வராக வேண்டும்" - தயாநிதி மாறன்

தயாநிதிமாறன்

"தி.மு.க செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், தமிழக மக்களின் நலன்களுக்காகப் பாடுபட்டுவருகிறார்; எனவே, அவர் தமிழகத்தின் முதல்வராக வர வேண்டும்" என்று முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.

தி.மு.க தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி, சென்னை திருவல்லிக்கேணி பகுதி தி.மு.க சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசுகையில், தயாநிதி மாறன் இவ்வாறு குறிப்பிட்டார்.

கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி, தி.மு.க சார்பில் தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் கலந்துகொண்டு பேசினார். ''மக்களுக்காகவும், மக்கள் பிரச்னைகளுக்காகவும் தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பாடுபட்டுக்கொண்டிருக்கிறார். கருணாநிதியின் வழியில் மக்கள் பிரச்னைகளுக்காக உழைக்கும் ஸ்டாலின், தமிழக முதல்வராக வரவேண்டும்'' என்று கூறினார். 'ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்கும் நாள் வெகுதொலையில் இல்லை' என்று தெரிவித்த தயாநிதி மாறன், தமிழகத்தில் அடுத்து நடைபெறும் சட்டசபைத் தேர்தலில் தி.மு.க நிச்சயம் வெற்றிபெறும் என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க