வெளியிடப்பட்ட நேரம்: 12:30 (08/06/2018)

கடைசி தொடர்பு:12:33 (08/06/2018)

சென்னையில் ஒரே நாளில் 23 இடங்களில் ஐ.டி ரெய்டு!

வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் சென்னையில் 23 இடங்களில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

வரி ஏய்ப்புப் புகாரின் அடிப்படையில், சென்னையில் 23 இடங்களில் வருமான வரித் துறையினர் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஐடி ரெய்டு

சென்னையில், பல்வேறு கடைகள் வரி ஏய்ப்புச் செய்வதாக வருமான வரித் துறைக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, வருமான வரித் துறை தரப்பில் சோதனை நடத்த முடிவுசெய்யப்பட்டது. அதன் அடிப்படையில், இன்று காலை முதல் சென்னையில் உள்ள பல்வேறு கடைகளில் வருமான வரித் துறையினர் சோதனையில் ஈடுட்டுவருகின்றனர்.  தியாகராய நகர், பாரிமுனை, சவுகார்பேட்டை உள்ளிட்ட இடங்களில் உள்ள ஜவுளிக் கடைகள், நகைக்கடைகளில் வருமான வரித் துறை சோதனை நடைபெறுகிறது. காந்தி ஃபேப்ரிக், காந்தி பேஷன்ஸ், ஜெயின் டெக்ஸ்டைல்ஸ் உள்ளிட்ட  கடைகளில் சோதனை நடைபெற்றுவருகிறது.

ஐடி ரெய்டு
 

இந்த வருமான வரித் துறையின் சோதனை, சென்னையில் மொத்தம் 23 இடங்களில் நடைபெற்றுவருவதாகக் கூறப்படுகிறது. வரி ஏய்ப்புப் புகார் மற்றும் ஜவுளிக் கடைகளின் மொத்த வியாபாரத்தில் ஈட்டிய பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தியது உள்ளிட்ட புகாரின் அடிப்படையில் இந்தச் சோதனை நடைபெறுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.