நீட் தேர்வு தோல்வியால் உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற மாணவி!

மாணவி அஷ்டலட்சுமி

நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் ஷேசாங்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர், விவசாயி ராதாகிருஷ்ணன். இவருக்கு ஒரு மகனும், மூன்று மகள்களும் உள்ளனர். இதில் கடைசி மகள் அஷ்டலட்சுமி, கண்டமங்கலம் பகுதியில் உள்ள வள்ளலார் அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்து, 742 மதிப்பெண்கள் எடுத்திருந்தார்.

இந்நிலையில், அஷ்டலட்சுமி மருத்துவம் பயில்வதற்காக  நீட் தேர்வு எழுதி, அதில் 12 மதிப்பெண்கள் எடுத்து தோல்வியடைந்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர், எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து, அவரை மீட்டு கண்டமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. தற்போது, மாணவி நலமுடன் உள்ளார். நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!