வெளியிடப்பட்ட நேரம்: 15:55 (08/06/2018)

கடைசி தொடர்பு:16:07 (08/06/2018)

ரசிகர்களின் செல்ஃபி ஆர்வத்தால் காணாமல்போன கோலியின் மெழுகுச்சிலை காது!

ரசிகர்களின் செல்ஃபி ஆர்வத்தால் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலியுடைய மெழுகுச் சிலையின் காதுப் பகுதி பாதிப்படைந்துள்ளது.

ரசிகர்களின் செல்ஃபி ஆர்வத்தால் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலியுடைய  மெழுகுச் சிலையின் காதுப் பகுதி பாதிப்படைந்துள்ளது.

கோலி


டெல்லியில் புகழ்பெற்ற துலாட்ஸ் அருங்காட்சியகம் உள்ளது. இங்கு கலைத்துறை, அரசியல், விளையாட்டு, பொதுச்சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பிரபலங்களின் மெழுகுச் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இதில் கபில்தேவ், சச்சின் டெண்டுல்கர், உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்களின் மெழுகுச் சிலைகள் இடம்பெற்றுள்ளன. தினந்தோறும் ஏராளமான ரசிகர்கள் இந்த அருங்காட்சியகத்தில் குவிந்து, தங்களுக்கு விருப்பமான பிரபலங்களுடன் செல்ஃபி எடுப்பது வழக்கம்.

அந்த வகையில் கடந்த 6-ம் தேதி இந்திய அணியின் கேப்டன் விராட்கோலியின் மெழுகுச் சிலை நிறுவப்பட்டது. 'விராட்' சிலையுடன் செல்ஃபி எடுக்க ரசிகர்கள் பெருமளவில் ஆர்வம்காட்டி வருகின்றனர். ரசிகர்கள் முந்திக்கொண்டு செல்ஃபி எடுப்பதால், நிறுவி 2 நாள்களே ஆன, விராட் கோலி சிலையின் வலது காதுப் பகுதி உருகியுள்ளது. செல்ஃபி எடுக்கும்போது, ஏற்படும் தொடர் வெளிச்சத்தின் சூடு இதற்கு காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து சிதிலமடைந்த  காதுப் பகுதியை சீர்செய்யும் பணி நடைபெற்றுவருகிறது.