அமைதியான நாடுகள் பட்டியல் வெளியீடு! இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்?

ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் செயல்பட்டுவரும் பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நிறுவனம் 2018-ம் ஆண்டுக்காக உலகின் அமைதியான நாடுகள் கொண்ட பட்டியலைத் தயாரித்து வெளியிட்டுள்ளது.

இந்தியா

இதில், 2008-ம் ஆண்டிலிருந்து ஐஸ்லாந்து முதல் இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. நியூசிலாந்து 2 வது இடத்தையும் ஆஸ்திரியா 3 வது இடத்தையும் போர்ச்சுகல், டென்மார்க் ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களையும் பிடித்துள்ளன. 

கடந்த ஆண்டு 141 வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது, நான்கு இடங்கள் முன்னேறி 137 வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தியாவில், கடுமையான சட்டங்கள் மூலம் வன்முறை தொடர்பான மரணங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

சீனா, ரஷ்யா மற்றும் தென்னாப்ரிக்கா ஆகிய நாடுகள் உள்ளாட்டு பாதுகாப்புக்காக அதிகபடியான செலவுகளைச் செய்துள்ளதாகவும் இதனால் பொருளாதாரப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிரியா, ஆஃப்கன், இராக், தெற்கு சூடான், சோமாலியா உள்ளிட்ட நாடுகள் அமைதியில் மிகவும் பின்தங்கிய நாடுகளாக உள்ளன. இலங்கை, சாட், கொலம்பியா, உகாண்டா நாடுகளிலும் வன்முறை குறைக்கப்பட்டுள்ளதாக ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!