`எனக்கே தெரியாமல் வைரலாகுது..!’ - பிக் பாஸ் 2 நிகழ்ச்சி குறித்து நடிகர் டேனியல்

பார்வையாளர்களுக்குப் பொழுதுபோக்கு, பங்கேற்பாளர்களுக்குப் பப்ளிசிட்டி. இதுதான் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஃபார்முலா.

பிக் பாஸ்
 

கடந்தாண்டு ஒட்டுமொத்த தமிழ்நாடே ஓவியா... ஓவியா எனச் சிலாகித்தது. அதே சமயம் ஜூலி எனும் சாதாரண பெண்ணை வில்லி ஆக்கியது. தற்போது பிக் பாஸ் சீஸன் 2-வுக்கான அறிவிப்புகள் வெளியாகிவிட்டன. ஜூன் 17-ம் தேதிமுதல் இரவு 9 மணிக்கு பிக்பாஸ் சீஸன் 2 நிகழ்ச்சி ஒளிபரப்பாகவிருக்கிறது. இந்நிகழ்ச்சிக்கான விளம்பர டீசரில் அதிரடி காட்டுகிறார் கமல். “நல்லவர் யார், கெட்டவர் யார்” என்று கமல் பேசும் தொனியிலேயே இந்தமுறை `செம்ம என்டர்டெயின்மென்ட் காத்திருக்கு’ எனத் தோன்றுகிறது. இதுபோதாது என்று, தினம் தினம் இணையத்தில் பிக் பாஸ்-2 நிகழ்ச்சியில் பங்குபெறும் பிரபலங்களின் பட்டியல்கள் வெளியாகி எதிர்பார்ப்பைக் கூட்டுகிறது. 

கஸ்தூரி, இனியா, சரவணன் மீனாட்சி ரக்ஷிதா, ஆலியா மானசா, லட்சுமி மேனன், இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தில் நடித்த யாஷிகா ஆனந்த் என யூகப் பட்டியல் நீள்கிறது. அரசியல் பிரபலங்களின் பெயர்கள் மட்டும் இன்னும் வெளியாகவில்லை. எழுத்தாளர் சாரு நிவேதிதா, நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோரும் பிக்பாஸ்-2 நிகழ்ச்சியில் பங்குபெற இருப்பதாகவும் செய்திகள் பரவிவருகின்றன. 

டேனியல்
 

இணையத்தில் பரவிவரும் பெயர்களின் பட்டியலில் நடிகர் டேனியல் பெயரும் இடம்பெற்றுள்ளது.`ஃப்ரெண்டு... லவ் மேட்டரு.. ஃபீல் ஆகிட்டாப்ள... ஆஃப் சாப்பிட்டா கூல் ஆகிருவாப்ள' என்ற வசனத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த இவர், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இடம் பிடித்திருக்கிறாரா என்று தெரிந்துகொள்ள அவரைத் தொடர்புகொண்டு பேசினோம். `பிக் பாஸ்-2 நிகழ்ச்சிக்கு போறீங்களாமே...’ என்று கேட்டதற்கு, “பிக் பாஸ் நிகழ்ச்சியா. சத்தியமா இல்லைங்க. யார் இப்படிக் கிளப்பிவிட்டாங்கனு  எனக்கே தெரியலை. ரெண்டு மூணு நாளா இப்படி ஒரு வதந்தி பரவிவருது” என்றார் சற்று கடுப்பாக. 

இந்தமுறை பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு யாரையெல்லாம் விஜய் டிவி களம் இறக்கியுள்ளது என்பதை, ஜூன் 17-ம் தேதிவரை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!