வெளியிடப்பட்ட நேரம்: 16:50 (08/06/2018)

கடைசி தொடர்பு:16:50 (08/06/2018)

`ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கணும்’ - ரூ.1,000 கோடி கடன் கேட்கும் ஏர் இந்தியா

நஷ்டத்தை சமாளிக்க முடியாமல் தவித்து வரும் ஏர் இந்தியா நிறவனம் 1,000 கோடி கடன் வழங்குமாறு நிதி நிறுவனங்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.

நஷ்டத்தை சமாளிக்க முடியாமல் தவித்து வரும் ஏர் இந்தியா நிறுவனம் 1,000 கோடி ரூபாய் கடன் வழங்குமாறு நிதி நிறுவனங்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.

ஏர் இந்தியா


பிரபல விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனம் மத்திய அரசின்கீழ் செயல்பட்டுவருகிறது. இந்த நிறுவனம் பிற விமான நிறுவனங்களின் போட்டியைச் சமாளிக்க முடியாமல், எவ்வித லாபமுமின்றி  நஷ்டத்தில் இயங்கிவருகிறது. இதனால் பெருமளவில் இழப்பை சந்தித்து வருகிறது. இதனிடையே தனது நிறுவனத்தின் பங்குகளைத் தனியாருக்கு விற்க அந்நிறுவனம் முடிவு செய்தது. இந்தத் தனியார்மயமாக்கலுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதில் பணிபுரியும் ஊழியர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில், தனது 76% பங்குகளை விற்க ஏல தேதியையும் ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்தது. ஆனால், அந்நிறுவனத்தின் பங்குகளை யாரும் வாங்க முன்வரவில்லை. இதையடுத்து ஏர் இந்தியா நிறுவனத்தை மத்திய அரசே ஏற்று நடத்தும் என விமான போக்குவரத்துத்துறை தெரிவித்தது. இதனிடையே ஏர் இந்தியாவில் பணிபுரியும் ஊழியர்களுக்குக் கடந்த 3 மாதமாகச் சம்பளம் வழங்கப்படவில்லை. நிறுவனம் நஷ்டத்தை ஈடு செய்யும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் மத்திய அரசின் உத்தரவாதத்துடன் ஓராண்டுக்குள் திருப்பி அளிக்கும் வகையில் 1,000 கோடி ரூபாய் வழங்குமாறு நிதி நிறுவனங்களுக்கு ஏர் இந்தியா நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.