வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (08/06/2018)

கடைசி தொடர்பு:21:00 (08/06/2018)

இந்தியா - சீனா உறவு மேம்படும்: நிர்மலா சீதாராமன் நம்பிக்கை!

இந்தியா -சீனா நாடுகளுக்கு இடையேயான உறவு எதிர்காலத்தில் மேம்படும் என மத்தியப் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இந்தியா -சீனா நாடுகளுக்கு இடையேயான உறவு எதிர்காலத்தில் மேம்படும் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

நிர்மலா


சீனாவின் புவி அரசியல், வணிகம், சமூக மாற்றம் தொடர்பான சர்வதேச கருத்தரங்கு சென்னை மயிலாப்பூரில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இதில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், இந்தியா பல்வேறு துறைகளில் முன்னேறி வருவதாகவும், விவசாயம், மென்பொருள், தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் நல்ல வளர்ச்சி அடைந்துள்ளதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.

மேலும் மற்ற நாடுகளை ஒப்பிடுகையில், ஆயுர்வேதம், யோகா, மருத்துவத்தில் இந்தியாவிற்கென தனி அடையாளம் இருப்பதாகக் கூறினார். பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்கள் இந்தியாவின் வளர்ச்சியை அடுத்தகட்டத்துக்கு எடுத்துகொண்டு செல்லும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். நாளை நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இருநாடு உறவுகள் வலுப்படும் என நிர்மலா சீதாராமன் கூறினார். சீனா அதிபர் ஜி ஜின்பிங் உடன் பிரதமர் மோடி சுமுக உறவை மேற்கொண்டிருக்கிறார் எனவும் இதன்மூலம் எதிர்காலத்தில் இந்தியா -சீனா இடையேயான உறவு மேம்படும் என்றார்.