இந்தியாவின் நீளமான சொகுசு பஸ்ஸை அறிமுகப்படுத்தியது டெய்ம்லர்!

இந்நிலையில்தான் ஏற்கெனவே விற்பனை செய்துவந்த பிரிமியம் SHD 2436 லக்ஸூரி பஸ்ஸுக்குப் பதிலாக, SHD 2441 எனும் மேம்படுத்தப்பட்ட மாடலைக் களமிறக்கியுள்ளது டெய்ம்லர்.

ஜெர்மனியைச் சேர்ந்த டெய்ம்லர் நிறுவனம், பாரத் பென்ஸ் என்ற பெயரில் கடந்த 2012 முதலாக, சென்னையில் உள்ள தனது தொழிற்சாலையில், கமர்ஷியல் வாகனங்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. 9 டன் பிரிவில் ஸ்கூல் பஸ், டூரிஸ்ட் பஸ், ஆபீஸ் பஸ் - 16 மற்றும் 24 டன் பிரிவில் மெர்சிடீஸ் பென்ஸ் மல்ட்டி ஆக்ஸில் பஸ் மற்றும் பஸ் சேஸிஸ் ஆகியவற்றை இந்தியா மட்டுமல்லாது ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஆசியா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. 


டெய்ம்லர் SHD பஸ்... இதை எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே?

 

டெய்ம்லர்


இந்நிலையில்தான் ஏற்கெனவே விற்பனை செய்துவந்த பிரிமியம் SHD 2436 லக்ஸூரி பஸ்ஸுக்குப் பதிலாக, SHD 2441 எனும் மேம்படுத்தப்பட்ட மாடலைக் களமிறக்கியுள்ளது டெய்ம்லர். இந்த Super High Deck வகை லக்ஸூரி பஸ்ஸில், ZF ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் - 15 மீட்டர் நீளம் - முன்பைவிடக் கூடுதலாக 50bhp பவர் - ECAS & ஏர் சஸ்பென்ஷன் - 57 இருக்கைகள் - ESP - 40 டிகிரி Roll Over Angle ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது. விரைவில் இந்தியா முழுக்க இருக்கும் பாரத் பென்ஸ் நிறுவனத்தின் 34 டீலர்களில் இது விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.


இந்த நீளமான லக்ஸூரி பஸ்ஸில் என்ன ஸ்பெஷல்?


இந்த லக்ஸூரி பஸ்ஸின் பாடி அலுமினியத்தாலும், சேஸிஸ் ஸ்டீலாலும் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதனால் தனது வகையிலே குறைவான எடை மற்றும் அதிக மைலேஜை இந்த பஸ் வழங்குவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன. தவிர ஏபிஎஸ், பின்பக்க ஆக்ஸில்களுக்கு மேலே ஃப்யூல் டேங்க், Active Steerable Tag Axle, ஆன்ட்டி ரோல் பார்கள், ESP, EBD, ASR, ஒவ்வொரு இருக்கைக்கும் சீட் பெல்ட் ஆகியவை இருப்பதால், பாதுகாப்பிலும் இந்த லக்ஸூரி பஸ் சிறந்து விளங்குகிறது. 

 

டெய்ம்லர்


இதில் பொருத்தப்பட்டிருக்கும் OM457 சீரிஸ் இன்ஜின், 410bhp பவர் - 190kgm டார்க்கை வெளிப்படுத்துகிறது. முந்தைய மாடலில் மேனுவல் கியர்பாக்ஸ் இருந்த நிலையில், 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இன்ஜின் இணைக்கப்பட்டுள்ளது. இந்த பஸ், ஒரு லிட்டர் டீசலுக்கு 2.75 கிமீ மைலேஜ்தான் தரும் என்றாலும், இதன் சேஸியில் 3X200 லிட்டர் டீசல் டேங்க் இருப்பது, நீண்ட தூரப் பயணங்களில் பயனுள்ளதாக இருக்கும். ஸ்லீப்பர் மற்றும் எலெக்ட்ரிக் பஸ்களைத் தயாரிக்கும் எண்ணம் இல்லை என டெய்ம்லர் கூறியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!