வெளியிடப்பட்ட நேரம்: 20:12 (08/06/2018)

கடைசி தொடர்பு:20:12 (08/06/2018)

 கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில் - அக்ரி கமாடிட்டி

 

தி.ரா.அருள்ராஜன்

தலைவர், பங்குச்சந்தை, கமாடிட்டி சந்தைப் பயிற்சி மையம் www.ectra.in

அக்ரி கமாடிட்டி 

மென்தா ஆயில்:

சென்ற வாரம், மென்தா ஆயில் நிலவரத்தைப் பற்றி எழுதியபோது, இதுவரை இறங்குமுகமாகவே இருந்து வந்துள்ளது. ஆனாலும், ஒரு இடைக்கால ஏற்றத்திற்குக் கொஞ்சம் தயாரவதுபோல்தான் உள்ளது என்ற சொல்லி இருந்தோம். அதைப்போலவே, இடைக்கால ஏற்றமும் நிகழ்ந்துள்ளது. சென்ற வாரத்தைப் பொறுத்தவரை, மென்தா ஆயில், காளைகளுக்கு வசந்த வாரமாகவே அமைந்து இருந்தது.

சென்ற வாரம் சொன்னது…

" நன்று இறங்கிய நிலையில் உடனடி ஆதரவு 1130 ஆகும். இதற்குக் கீழே முக்கிய ஆதரவு 1110 ஆகும். உடனடியான வலிமையான தடைநிலை 1170 ஆகும்.’’

சென்ற வாரத்தின் முந்தைய வாரத்தில், வியாழன் மற்றும் வெள்ளி என இரண்டு நாட்களும் வலிமையாக ஏறி உடனடி தடைநிலையாக இருந்த 1139ஐ உடைத்துள்ளது. தற்போது டபுள் பாட்டம் தோற்றுவித்துள்ள நிலையில், ஏற்றம் தொடரலாம் என்ற கருத்தையும் எழுதி இருந்தோம். அந்த டபுள் பாட்டம் நிஜமாகவே ஒரு வலுவான ஏற்றத்திற்கு வழிவகுத்துக் கொடுத்துள்ளது. சென்ற வாரம், திங்களன்று 1164 என்ற புள்ளியில் துவங்கிய ஏற்றம், உச்சமாக 1181ஐத் தொட உதவினாலும், அன்று முடியும்போது சற்றே இறங்கியே முடிந்துள்ளது. ஆனால், அடுத்தநாள் செவ்வாய் அன்று, திங்கள் அன்று இழந்ததை ஈடுகட்டும் அளவிற்குப் பலமாக ஏறியது. இந்த ஏற்றம் உச்சமாக 1205 என்ற புள்ளியைத் தொட உதவியது மட்டும் அல்ல, அந்த உச்சத்தைத் தக்கவைக்கவும் உதவியது. இந்த ஏற்றத்தின் உந்துதல், அடுத்து புதனன்றும் தொடர்ந்தது. புதனன்று ஒரு கேப் அப்பில் துவங்கி, ஏற ஆரம்பித்து, சந்தை முடிவதற்குச் சற்று முன்பு பலமான ஏற்றத்தினால், உச்சமாக 1250 என்ற புள்ளியை தொட்டது.

ஆனால் காளைகளின் இந்த இரண்டுநாள் ஏற்றத்தை, புதனன்று சந்தை முடியும்போது கரடிகள் ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தன. புதனன்று, புதிய உச்சத்தைத் தொட்டாலும், ஏற்றம் முழுவதையும் இழந்து 1218 என்ற புள்ளியில் முடிவடைந்தது. அடுத்த நாள் வியாழனன்று கரடிகள், தங்கள் ஆதிகத்தைத் தொடர்ந்தன. மென்தா ஆயில் வியாழனன்று, புதனன்று முடிந்த அளவிலேயே தொடங்கினாலும், மெள்ள மெள்ள இறங்கி, மாலை மூன்று மணி அளவில் 1192 என்ற எல்லையைத் தொட்டது. அதன் பின் கடைசி ஒரு மணிநேரத்தில் காளைகள் களத்தில் இறங்கி, மென்தா ஆயிலின் விலையை 1216 என்ற விலையைத் தொட வைத்தன. காளைகளின் இந்த ஆதிக்கம் வெள்ளியன்றும் தொடர்ந்தது. வெள்ளியன்று ஒரு கேப் அப்பில் தொடங்கிய மென்தா ஆயில், மள மளவென்று ஏறி உச்சமாக 1255 என்ற புள்ளியைத் தொட்டது. ஆனால், வெள்ளிக்கிழமையின் ஏற்றத்தைத் தக்கவைக்க முடியாமல், ஏறக்குறைய ஆரம்பித்த இடத்திலேயே வந்து முடிந்துள்ளது.

இனி என்ன செய்யலாம்…

காளைகளுக்கும், கரடிகளுக்கும் வலிமையாகச் சண்டை நடந்து வந்தவேளையில், 1190 என்ற எல்லை முக்கிய ஆதரவாக உள்ளது. இது உடைக்கப்பட்டால், ஏற்றம் முடிவுக்கு வரலாம். மேலே 1255 என்ற எல்லை வலிமையான தடைநிலையாக உள்ளது.

காட்டன்:

கடந்த வாரங்களின், காட்டன் அகண்ட பக்கவாட்டு நகர்விலிருந்து, மேல் எல்லையை உடைத்து வலிமையாக ஏற ஆரம்பித்திருந்ததைப் பற்றி எழுதியிருந்தோம். சென்ற வாரத்தின் ஆரம்பத்தில் கொஞ்சம் பக்கவாட்டு நகர்வில் இருந்தாலும், பின்பு காளைகள் வலிமையைக் காட்டி விலையை ஏற்றின.

சென்ற வாரம் சொன்னது... "தற்போது 21800 என்பது முக்கிய ஆதரவு நிலையாகவும், மேலே 22580 என்ற இடம் முக்கிய தடைநிலையாகவும் உள்ளது."

காட்டன் சென்ற வாரம், திங்கள் மற்றும் செவ்வாயன்று நாம் கொடுத்திருந்த தடைநிலையான 22580 ஐத் தாண்ட முடியாமல், டோஜி உருவமைப்பைத் தோற்றுவித்து இருந்தது. ஆனால், புதனன்று நல்ல ஏற்றத்தைக் காட்டி 22500வரை ஏறியது. வியாழனன்று கமாடிட்டிக்குச் சிறப்பான நாளாக அமைந்து இருந்தது. காட்டன் நன்கு ஏறி உச்சமாக 22900 ஐத் தொட்டு, முடியும்போது கொஞ்சம் இறங்கி 22710 என்ற எல்லையில் முடிந்தது. வெள்ளியன்று காளைகள் மீண்டும் வலிமையைக் காட்டியதால் உச்சமாக 23110 என்ற எல்லையைத் தொட்டு 23050ல் முடிந்துள்ளது.

இனி என்ன செய்யலாம்?

வலிமையான ஏறிய நிலையில் 23150 என்ற எல்லை தடைநிலையாக உள்ளது. கீழே 22700 என்பது மிக முக்கிய ஆதரவு ஆகும்.