Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

காதலனை கைது செய்த காவல்துறை; கையை அறுத்துக்கொண்ட காதலி..! நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு

குற்ற வழக்குகளில் தொடர்புடைய காதலனை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சென்றபோது அவரது காதலி பிளேடால் தனது கையை அறுத்து தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

காதலி

திருவள்ளூர் அடுத்த வயலார் நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கீதா.  இவர் திருமழிசை சேர்ந்த எபினேசர் ராஜன் என்பவரைக் காதலித்து வந்துள்ளார். எபினேசர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் வெள்ளவேடு காவல் நிலையத்தில் நிலுவையில் இருப்பதால் அவரை விசாரிப்பதற்காக  காவல்துறையினர் அழைத்துச் சென்றுள்ளனர். தற்போது எந்த திருட்டு வழக்கிலும் தொடர்பு கொள்வதில்லை என்றும், அவரை உடனடியாக அனுப்பி வைக்குமாறு காவல் நிலையத்தில் கேட்டுள்ளார் சங்கீதா.

ஆனால், காவல்துறையினர் மறுத்ததோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த திருவள்ளூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு அழைத்து வந்துள்ளனர். இதனைக் கண்டித்து சங்கீதா திருவள்ளூர் நீதிமன்ற வளாகத்தில் பிளேடால் கையை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதைப் பார்த்து காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக திருவள்ளூர் காவல்துறையினர் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதலனை காவல்துறையினர் அழைத்துச் சென்ற வேதனையில் நீதிமன்ற வளாகத்தில் காதலி பிளேடால் தனது கையை அறுத்துக் கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement

MUST READ

Advertisement