வெளியிடப்பட்ட நேரம்: 01:53 (09/06/2018)

கடைசி தொடர்பு:01:53 (09/06/2018)

`நான் ராஜா... எனக்கு முழு அதிகாரம் இருக்கிறது' -அமெரிக்க அதிபரை விமர்சித்த டைம் இதழ்

அமெரிக்காவின் புகழ்மிக்க டைம் வார இதழ், அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை விமர்சிக்கும் விதமாக மீண்டும் ஒரு கவர் அட்டைப்படத்தை வெளியிட்டுள்ளது. 

ட்ரம்ப்

PC-Ndtv

அமெரிக்காவின் 45வது அதிபராகப் டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதிலிருந்து பல சர்ச்சைகளில் சிக்கிவருகிறார். இதற்கேற்ப, அமெரிக்காவின், பிரபல டைம் வார இதழும் ட்ரம்பை விமர்சிக்க தவறுவதில்லை. இந்தவகையில், வரும் ஜூன் 2018 பதிப்பில் வெளியாகவிருக்கும் இதழின், கவர் அட்டைப் படத்தை டைம் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

அதில், அதிபர் ட்ரம்ப் தன்னை ராஜாபோல் சித்தரித்துக் கொள்ளும் விதமாக புகைப்படம் இடம்பெற்றுள்ளன. அட்டைப் படத்தை வெளியிட்ட டைம் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றையும் இணைத்துள்ளது. அந்த வீடியோவில், ஒரு கண்ணாடி முன் ட்ரம்ப் சாதாரணமாக நிற்கிறார். அப்போது, கண்ணாடியில் கிரீடம் அணிந்து, ராஜா போல ட்ரம்ப் காட்சியளிக்கிறார். இதற்கு 'நான் ராஜா... எனக்கு முழு அதிகாரம் இருக்கிறது' என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

அதிபர்  ட்ரம்ப் பற்றி வெளியாகும் இந்த கட்டுரையில்,  `வெள்ளை மாளிகையில் நடத்தப்பட்ட அரசியல் தாக்குதல்கள் குறித்த தகவலும் ரஷ்யாவின் குறுக்கீடு பற்றி விசாரிக்க சிறப்பு ஆலோசகர் ராபர்ட் முல்லர் குறித்த தகவலும் இடம்பிடித்துள்ளன'.  டைம் இதழ் இவ்வாறு ட்ரப்பை விமர்சிப்பது முதல்முறையல்ல. கடந்த ஜனவரி 2017-ம் ஆண்டு டைம் இதழ் வெளியிட்ட அட்டைப் படத்தில், `ஓவல் அலுவலகத்தில் உயரும் தண்ணீரை எதிர்கொள்ளும் அதிபர் ட்ரம்ப்' எனக் குறிப்பிட்டு அவரைக் கேலி செய்துள்ளது.