பிளாஸ்டிக் கழிவுகளால் கடலில் மீன் வளம் அழிகிறது..! எச்சரிக்கும் மீன்வளத்துறை!

கடலில் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டுவதால் இன்னும் 12 ஆண்டுகளில் மீன் இனங்கள் வெகுவாக குறைந்துவிடும் என உலக கடல் தின விழாவில் சின்னமுட்டம் மீன்வளத்துறை உதவி இயக்குனர் தீபா பேசினார்.

டலில் பிளாஸ்டிக் கழிவுகளைக் கொட்டுவதால் இன்னும் 12 ஆண்டுகளில் மீன் இனங்கள் வெகுவாக குறைந்துவிடும் என உலக கடல் தின விழாவில் சின்னமுட்டம் மீன்வளத்துறை உதவி இயக்குனர் தீபா பேசினார்.

உலக கடல் தின விழா

கன்னியாகுமரியை அடுத்த சின்னமுட்டம் மீன்வளத்துறை உதவிஇயக்குனர் அலுவலகத்தில் உலக கடல் தின விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த சின்னமுட்டம் மீன்வளத்துறை உதவி இயக்குனர் தீபா பேசுகையில், "பிரேசில் நாட்டில் ரியோடிஜெனீரோ நகரில் கடந்த 1992-ம் ஆண்டு நடந்த புவி மாநாட்டில் எடுக்கப்பட முடிவின் படி ஜூன் 8-ம் தேதி உலக கடல் தினம் கொண்டாடி வருகிறோம். கடந்த 2009-ம் ஆண்டு முதல் உலக கடல் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இன்று உலகில் பசுபிக் சமுத்திரம், அட்லாண்டிக் சமுத்திரம், இந்துமகா சமுத்திரம், அண்டாட்டிக் சமுத்திரம், ஆர்க்டிக் சமுத்திரம் என ஐந்து சமுத்திரங்கள் காணப்படுகின்றன. புவிமேற்பரப்பிலுள்ள சமுத்திரங்கள் தனிதனியானவை என கொள்ளப்பட்டு வந்தாலும் அவை அனைத்தும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவையாகும். நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் கழிவுகள் அனைத்தும் நதியில் அல்லது கடலில் சென்று சேருகிறது. இதனால் கடல் வளம் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. கடலில் சேரும் கழிவுகளை மீன்கள் உண்பதால் மீன் இனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுவருகிறது. இன்னும் 12 ஆண்டுகளில் மீன் இனங்கள் வெகுவாக குறைந்துவிடும் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இது ஒருபுறம் இருக்க பனிப் பாறைகள் உருகி கடல் மட்டம் உயர்கிறது. இதனால் இயற்கை சமநிலை பாதிக்கப்படுகிறது. செயற்கை கழிவுகளைக் கடலில் கொட்டுவதால் கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுவது ஒருபுறம். மறுபக்கம் குறிப்பிட்ட சதவீத பவளப்பாறை அழிந்து விட்டது. கடலை நாம் கண்டு கொள்ளாவிட்டால் பெரிய பாதிப்புக்கு உள்ளாவோம். கடல் வளம் பேண உலக மக்கள் ஒன்றிணைந்து செயல்படுவது அவசியம். இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சி நிறைவடைந்த பிறகு சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகப் பகுதியில் துப்புரவு பணி நடந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!