150 வீரர்கள், 16 தீயணைப்பு வாகனங்கள் - மும்பை கோட்டைப் பகுதியில் பயங்கர தீ விபத்து

மும்பை கோட்டைப் பகுதியில் உள்ள படேல் சேம்பர்ஸ் கட்டடத்தில் இன்று அதிகாலை திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

தீ விபத்து

மும்பை கோட்டைப் பகுதியில் உள்ள படேல் சேம்பர்ஸ் கட்டடத்தில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து தீ அணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வருவதுக்கு முன்னர் தீ மளமளவெனக் கட்டடம் முழுவதும் பரவியது. இதையடுத்து 12 தீயணைப்பு வாகனங்கள் மூலம் வீரர்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால், தீ மேலும் பரவி வீரர்கள் அருகில்கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மேலும், சில தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. மிகவும் பயங்கரமான தீவிபத்தால் கட்டடம் முழுவதும் சேதமடைந்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய தீயணைப்புத்துறை உயரதிகாரி, “இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. 16 தீயணைப்பு வாகனங்கள், 11 தண்ணீர் லாரிகள் மற்றும் 150 தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபட்டனர். இதில் இரண்டு வீரர்களுக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. மற்ற அனைவரும் மிகவும் பாதுகாப்பாக உள்ளனர். தீ உருவானதுக்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை. தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது” எனத் தெரிவித்தார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!