Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்ட இந்திய பணிப்பெண் - ஓமன் நாட்டில் நிகழ்ந்த கொடூரம்!

ஓமன் நாட்டில் சித்திரவதை தாங்கமுடியாமல் தப்பிச் செல்ல முயன்ற இந்திய பணிப்பெண் சிகிச்சைக்குப் பணமின்றி தவிக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

பணிப்பெண்

 

கேரளா மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் சீரயங்கிழு பகுதியைச் சேர்ந்தவர் சீஜா. ஓமன் நாட்டில் மஸ்கட் பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரி ஒருவரின் வீட்டில் பணிப்பெண்ணாகக் கடந்த 2016-ம் ஆண்டு முதல் வேலை செய்துவருகிறார். இவரின் கணவர் பிஜுமோன் என்பவரும் அதே பகுதியில் மின்சார ஊழியராகப் பணியாற்றி வந்தார். சீஜா பணிப்பெண்ணாகப் பணிபுரியும் வீட்டில் அவருக்குத் தொடர்ந்து சரிவர ஊதியம் வழங்கப்படவில்லை.

மேலும், அவருக்கு அந்த வீட்டின் உரிமையாளர் உணவு உள்ளிட்டவை முறையாக வழங்காமல், அடித்துத் துன்புறுத்தி சித்திரவதை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த வீட்டிலிருந்து தப்பிக்க வேறு வழியின்றி, இரண்டாவது மாடியிலிருந்து குதித்த சீஜாவின் இடுப்புக்கு கீழ்பகுதி முழுவதும் செயல் இழந்தது. இதையடுத்து, அவர் ஓமன் நாட்டில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

இந்தத் தகவல் அறிந்த வீட்டு உரிமையாளர், எவ்வித நஷ்ட ஈடும் வழங்காமல் சீஜாவை ஓமனிலிருந்து, அவருடைய சொந்த ஊரான கேரளாவுக்கு அனுப்பி வைத்தார். இந்நிலையில் மேல்சிகிச்சைக்குப் பணமின்றி தவித்துவரும் சீஜா குடும்பத்தினர், இந்த நிலைமைக்கு காரணமாக வீட்டு உரிமையாளரிடமிருந்து உரிய நஷ்ட ஈடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதே போல பலர் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

Image Credit - Scroll.in

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement

MUST READ

Advertisement