வெளியிடப்பட்ட நேரம்: 14:40 (09/06/2018)

கடைசி தொடர்பு:14:40 (09/06/2018)

மும்பையில் வெளுத்து வாங்கும் மழை! - பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்

மும்பையில் பெய்துவரும் கனமழை காரணமாகப் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என வானிலை ஆய்வுமையம் அறிவுறுத்தியுள்ளது.

மும்பையில் பெய்துவரும் கனமழை காரணமாகப் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என வானிலை ஆய்வுமையம் அறிவுறுத்தியுள்ளது.

மும்பை


மும்பையில் தென்மேற்குப் பருவ மழை தொடங்கி பெய்து வருகிறது. இதனால் மும்பையில் உள்ள பெரும்பாலான சாலைகளில் நீர் தேங்கி வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. மிகுந்த வேகத்தில் காற்று வீசுவதாலும் சாலைகளில் தண்ணீர் குளம்போல் தேங்குவதாலும் பள்ளம் மேடு தெரியாமல் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். தொடர் மழையால் மும்பையில் உள்ள தாதர், பரேல், பாந்த்ரா, அந்தேரி, போரிவலி உள்ளிட்ட பகுதிகள் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கின்றன. இந்நிலையில் தென்மேற்குப் பருவமழை கடல்பகுதியை வந்தடைவதால், இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு தினங்களில் பொதுமக்கள் யாரும் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என வானிலை ஆய்வுமையம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல சுற்றுலாப் பயணிகள் யாரும் கடல்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் எனவும் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகளிலும் மும்பை மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது.