வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (09/06/2018)

கடைசி தொடர்பு:17:00 (09/06/2018)

ட்ரம்ப் - கிம் சந்திப்பு ... சிங்கப்பூர் விரையும் பத்திரிகையாளர்கள்!

ட்ரம்ப் - கிம்ஜாங் சந்திக்கும் நிகழ்வு குறித்து செய்தி சேகரிக்க 3,000-க்கும் அதிகமான பத்திரிகையாளர்கள் சிங்கப்பூரில் முகாமிட்டுள்ளனர்.

ட்ரம்ப் - கிம்ஜாங் சந்திக்கும் நிகழ்வு குறித்து செய்தி சேகரிக்க 3,000-க்கும் அதிமான பத்திரிகையாளர்கள் சிங்கப்பூரில் முகாமிட்டுள்ளனர். 

சந்திப்பு


அமெரிக்க அதிபர் டொனால் ட்ரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம்ஜாங் உன் சந்திப்பு வருகின்ற 12-ம் தேதி சிங்கப்பூரில் உள்ள செந்தோசா தீவில் நடைபெற உள்ளது. உலகின் எதிரி நாடுகளாகப் பார்க்கப்பட்ட வடகொரியாவும் அமெரிக்காவும் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளனர். உலகமே இந்தச் சந்திப்பை எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கிறது. இரும்பெரும் அதிபர்களின் சந்திப்பு நடைபெற உள்ளதால் சிங்கப்பூரில் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. வான்பரப்பில் விமானங்களுக்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு நாள்களே உள்ள நிலையில் இந்தச் சந்திப்பு குறித்து அனைவரிடமும் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. அந்த வகையில், இது குறித்து செய்தி சேகரிக்க பல்வேறு நாடுகளின் முன்னணி நிறுவனங்களைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் சிங்கப்பூர் சென்றுள்ளனர். ஏறக்குறைய காட்சி, அச்சு ஊடகங்களைச் சேர்ந்த 3,000-க்கும் அதிமான பத்திரிகையாளர்கள் சிங்கப்பூரில் முகாமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.