வெளியிடப்பட்ட நேரம்: 16:50 (09/06/2018)

கடைசி தொடர்பு:16:50 (09/06/2018)

`ஃபேக் நியூஸ்க்கு எதிரான நடவடிக்கை!’ - வாட்ஸ் அப்பின் புதிய அப்டேட் #Forwarded

வாட்ஸ் அப்பில் பரவும் போலி செய்திகளைக் கட்டுக்குள் கொண்டு வர Forwarded என்ற புதிய ஆப்ஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

வாட்ஸ் அப் Forwarded

இந்தியாவில், தகவல் பரிமாற்றத்தில் வாட்ஸ் அப் செயலிதான் முதலிடத்தில் உள்ளது. இதே நேரத்தில், வாட்ஸ் அப் செயலி மூலம் நாள்தோறும் போலி செய்திகள், தவறான விளம்பரங்கள் என அதிகளவில் பரிமாறப்பட்டு வருகிறது. இந்தப் பிரச்னைகளைச் சமாளிக்க, வாட்ஸ் அப், ஃபார்வர்டு எனும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. 

இந்தப் புதிய வசதியால், மற்றொரு நபரின் தகவல்களை நாம் பகிரும்போது அதில் 'Forwarded' எனும் அடையாளம் குறிப்பிடப்படும். இதற்கு வாட்ஸ் அப் 2.18.179 என்ற வெர்சனை அப்டேட் செய்ய வேண்டும். இந்தப் புதிய அப்டேட் மூலம், மெசேஜ் அனுப்புவோருக்கும் மெசேஜ் பெறுவோருக்கும் செய்தியின் உண்மைத் தன்மை அறிந்துகொள்ள உதவியாக இருக்கும். அதாவது, மற்றவர்களிடமிருந்து பெறப்படும் மெசேஜ்களை நாம் பிறருக்கு அனுப்பும்போது அதில் forwarded எனக் குறிப்பிடப்பட்டிருக்கும். 

வாட்ஸ் அப் Forwarded

இதுகுறித்து, வாட்ஸ் அப் நிறுவனம் கூறுகையில், ‘குட் மார்னிங், குட் நைட்’ போன்ற தகவல்களை மக்கள் அதிகம் பகிர்வதால் எந்த பிரச்னையும் ஏற்படப் போவதில்லை. ஆனால், வெறுப்பு உணர்வைத் தூண்டும் வகையில், சமூகத்துக்கு எதிரான போலியான தகவல்கள் மக்களிடம் சென்றடைவதை இந்தப் புதிய வசதி கட்டுப்படுத்தும்' என்று வாட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.