`நீட் தேர்வை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்!’ - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி | We should accept NEET exam, says Minister Rajendra Balaji

வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (09/06/2018)

கடைசி தொடர்பு:19:40 (09/06/2018)

`நீட் தேர்வை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்!’ - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் மற்றும் சிவகாசியில் நடந்த நலத்திட்ட விழாவில்...

 

ராஜேந்திர பாலாஜி


விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் மற்றும் சிவகாசியில் நடந்த நலத்திட்ட விழாவில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டார். அதற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய ராஜேந்திர பாலாஜி. ''நீட்தேர்வு தோல்வியால் மாணவிகள் தற்கொலை முடிவு எடுப்பது கொடுமையானது. நீட் தேர்வு சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெற மாணவர்கள் தயாராக வேண்டும். ஒரு காலத்தில் செல்போன் யாரிடமும் இல்லை, இப்போது செல்போன் இல்லாத ஆளே இல்லை. அதுபோல் காலத்துக்கு தகுந்தாற்போல் நாம் மாறிக்கொள்ள வீண்டும். நீட் தேர்வை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இன்று தமிழகத்தில் 45,000 பேர் தேர்வாகியுள்ளார்கள். நீட் தேர்வு முடிவால் மாணவர்கள் தற்கொலை செய்ய வேண்டும் எனச் சில அரசியல் கட்சியினர் விரும்புகிறார்கள். தோல்வியடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதுபோல் நீட் தேர்வுக்கு எதிராகத் தூண்டிவிடும் செயலில் ஈடுபடுகின்றனர். நீட் தேர்வை தமிழக அரசு எதிர்த்துக் கொண்டுதான் இருக்கிறது, சூழ்நிலை காரணமாக ஆதரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் துரதிர்ஷ்டவசமானது, மிகவும் வருந்தத்தக்கது. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். குழந்தைகளுடன் போராடச் சென்ற மக்கள் வன்முறையில் ஈடுபடவில்லை. வன்முறையை யார் உருவாக்கினார்கள் என்பதை அறியத்தான் விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் வெளிப்படையாகப் பேசக்கூடியவர், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் பற்றி ரஜினிகாந்த் மனதில் பட்டதை பேசியிருக்கிறார். அதைப் பெரிய பிரச்னையாக எடுத்துக்கொள்ள வேண்டாம்'' என்றார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க