வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (09/06/2018)

கடைசி தொடர்பு:20:00 (09/06/2018)

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து மதுரையில் நூதனப் போராட்டம்!

madurai petrol , diesel issues

 

போராட்டம்

பெட்ரோல் , டீசல் விலை உயர்வைக் கண்டித்து மதுரையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மதுரையில் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர். இதில் 30-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

தற்போது பெட்ரோல், டீசல், கேஸ் உள்ளிட்ட பொருள்களின் விலையை மாநில அரசு கடுமையாக உயர்த்தியுள்ளது. இதனால் பல்வேறு மாநிலத்தில் இதற்கு எதிர்ப்பு அலைகள் வீசி வருகிறது. மத்திய பா.ஜ.க அரசைக் கண்டித்து பல்வேறு இடங்களில் நூதனப் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன .

இந்நிலையில், மதுரை பெத்தானியபுரத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மதுரை மாவட்ட  தலைவர் பார்த்தசாரதி தலைமையில் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பெட்ரோல், டீசல் சமையல் கேஸ் விலை உயர்வை கண்டித்து கேஸ் சிலிண்டர், டீசலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தும் விதமாகக் கண்ணீர் அஞ்சலி நோட்டீஸ் ஒட்டியும் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகன டயர் ஓட்டியும், நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்தப் போராட்டம் அப்பகுதியில் கவனம் ஈர்த்தது. 

போராட்டம்