தென்மண்டல ஐ.ஜி. அதிரடி மாற்றம்! - பின்னணித் தகவல்கள்

'தூத்துக்குடி கலவரத்தின் போது எஸ்.பி., டி.ஐ.ஜி. உட்பட பல உயர் அதிகாரிகள் நேரிடையாக எதிர்கொண்டார்கள்.  ஆனால், போராட்டக்காரர்கள் எதிர்கொள்ள முடியாத ஒரே அதிகாரி தெண்மண்டல ஐ.ஜி. சைலேஷ்குமார் யாதவ் மட்டும்தான். ஏனென்றால், தூத்துக்குடியில் முகாமிட்டிருந்தும்  ஸ்பாட்டுக்கு தாமதமாக வந்தார் என்று சொல்கிறார்கள்.

சைலேஷ்குமார் யாதவ் - ராஜேஸ்வரன்

மிக முக்கியமான ஒரு போராட்டத்தில் அலட்சியமாகவும், திட்டமிட்டு செயல்படாததாலும்தான் போராட்டம் கலவரமாக மாறியது என்றும் சொல்லப்பட்டு வந்தது. அது மட்டுமில்லாமல்,  இவர் தென்மண்டல ஐ.ஜி. ஆன பின்பு தென் மாவட்டங்களில் தொடர்ந்து சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டு வருவதாகவும், சமீபத்தில் சிவகங்கை மாவட்டம் கச்சநத்தத்தில் பட்டியலின சமூகத்தினர்மூன்று பேர் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு, அப்பகுதியிலுள்ள காவல் நிலையங்க்ளில் சாதி ரீதியாக செயல்படும் அதிகாரிகள்தான் காரணம் என்றும், அது பற்றி புகார் வந்தும் நடவடிக்கை எடுக்க எஸ்.பி.க்கு உத்தரவிடாமல் அலட்சியம் காட்டினார் என்றும் சொல்லப்படுகிறது. இதுபோல் பல பிரச்சனைகளை சொல்கிறார்கள். இந்த நிலையில்தான் அவர் அதிரடியாக சென்னை ஆயுதப்படைக்கு  இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக சண்முக ராஜேஸ்வரன் தென்மண்டல ஐ.ஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மதுரை போலிஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால்,  சி.பி.சி.ஐ.டியின் சிறப்பு புலனாய்வு ஐ.ஜி.யாக பதவி உயர்வு கொடுத்து சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக டேவிட்சன் ஆசிர்வாதம் மதுரை மாநகர கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக அரசு இன்று 11 ஐ.பி.எஸ். அதிகாரிகளை மாற்றி உத்தரவிட்டாலும்,ஐ.ஜி.சைலேஷ்குமார் யாதவ் மாற்றப்பட்ட விவகாரதான் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!