வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (09/06/2018)

கடைசி தொடர்பு:22:00 (09/06/2018)

சூறாவளிக் காற்றுடன் புழுதிப் புயல்! - முடங்கிய தலைநகர் டெல்லி

டெல்லியின் பல பகுதிகளில் மாலை நேரத்தில் சூறாவளிக் காற்றுடன் புழுதிப் புயல் வீசியது. 70 கி.மீ வேகத்தில் காற்று வீசியதுடன், லேசான மழையுடன் இடி, மின்னலும் வெட்டியதால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கினர்.

டெல்லி

இந்த ஆண்டு கோடை காலம் தொடங்கும் முன்பே பல மாநிலங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. அதிலும், வட இந்தியா முழுவதும் கோடை வெயில் கடுமையாக வாட்டி எடுத்து. பல இடங்களில் வெயிலின் அளவு 100 டிகிரியைத் தொட்டது. இந்த நிலையில், கடந்த மாதம் உத்தரபிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் திடீரென புழுதி புயல் வீசியது. இதைத்தொடர்ந்து இடியுடன் பலத்த மழையும் பெய்தது. 

டெல்லி

இதேபோன்று, மும்பையில் தற்போது பெய்து வரும் தென்மேற்குப் பருவமழை கடல்பகுதியை வந்தடைவதால், இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு தினங்களில் பொதுமக்கள் யாரும் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என வானிலை ஆய்வுமையம் எச்சரித்துள்ளது. 

இந்த நிலையில், டெல்லியில் அடுத்த 3 மணி நேரத்துக்கு பலத்த காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், டெல்லியில் உள்ள ஆ.கே புரம், துவாரகா, அக்பர் சாலை,சாட்டார்புர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. புழுதி புயலுடன் கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.