வெளியிடப்பட்ட நேரம்: 23:30 (09/06/2018)

கடைசி தொடர்பு:23:30 (09/06/2018)

நீலகிரி வனப்பகுதியில் உடும்பு பிடித்த இருவர் வனப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது!

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு அருகே, மசினகுடி வனச்சரகத்திற்கு உட்பட்ட ஆவரல்லாவை அடுத்த, பில்சோனா என்ற இடத்தில் உடும்பு பிடித்த இருவரை வனப் பாதுகாப்புச் சட்டத்தில் வனத்துறையினர் கைது செய்தனர்.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு அருகே,  மசினகுடி வனச்சரகத்திற்கு உட்பட்ட ஆவரல்லாவை அடுத்த, பில்சோனா என்ற இடத்தில் உடும்பு பிடித்த இருவரை வனப் பாதுகாப்புச் சட்டத்தில் வனத்துறையினர் கைது செய்தனர். 

கைது

மசினகுடி வனச்சரகத்திற்கு உட்பட்ட பூதநத்தம், பில்சோனா என்ற பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போது, இருவர்  உடும்பு பிடித்துக் கொண்டிருப்பதாக, வேட்டைத் தடுப்புக்காவலர்கள், மசினகுடி வன அலுவலருக்கு தகவலளித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் உடும்பு பிடித்து கொண்டிருந்த இருவரை பிடித்து விசாரித்துள்ளனர். அதில் இருவரும் பூதநத்தம் பகுதியை சேர்ந்த நாஞ்சன் (48), ரமேஷ் (38) என்பது தெரியவந்தது. உடும்பு கறி வேண்டும் என்று கேட்படவர்களுக்கு, பிடித்து கொடுப்போம், இந்த உடும்பை சாப்பிடுவதற்காக பிடித்துள்ளதாக வனத்துறையினரிடம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மசினகுடி வனச்சரக அலுவலர் மாரியப்பன் கூறுகையில்,‛‛இவர்கள் இருவரும் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்னர். இருவரையும் வனப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளோம். மேலும், கால்நடை மருத்துவர் உடும்பை  பரிசோதனை செய்து, நலமாக இருப்பதாக உறுதியளித்ததை அடுத்து மசினகுடி வனப்பகுதியில் விட்டுவிட்டோம்’’ என்றார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க