`சரியான சாலை வசதி இல்லை!' - 6 கி.மீ தூரம் கர்ப்பிணிப் பெண்ணைத் தூக்கிச் சென்ற அவலம்

ஆந்திர மாநிலம் அனுக் கிராமத்தை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவரை, மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வர இயலாத காரணத்தால், சுமார் 6 கி.மீ தூரம், போர்வையால் கட்டி தூக்கிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கர்ப்பிணி

ஆந்திர பிரதேச மாநிலம், விசாகப்பட்டினம் அருகிலுள்ள அனுக் என்னும் கிராமத்தில் குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். மலைப்பகுதியான அந்த கிராமத்தில் இருந்து நகரத்துக்கு செல்ல, சரியான சாலை வசதி அமைக்கப்படவில்லை. இதனால், அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள் ஆளாகி வருகின்றனர். 

இந்நிலையில் இன்று, அப்பகுதியை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உறவினர்கள் ஆம்புலன்ஸை அழைத்துள்ளனர். சரியான சாலை வசதி இல்லாததால், குறித்த நேரத்தில் ஆம்புலன்ஸ் வர இயலவில்லை. இதனால், சற்றும் தாமதிக்காத அப்பெண்ணின் உறவினர்கள், மூங்கில் தடி ஒன்றில், போர்வையைத் தொட்டில் போல் கட்டி, அவரை அதனுள் வைத்து,  சுமார் 6 கி.மீ தூரம் அப்பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். முன்னதாக, கேரளாவிலும் கடந்த மூன்று நாளுக்கு முன்பு இதே போன்று, 27 வயது மதிக்கத்தக்க கர்ப்பிணி பெண் ஒருவரை போர்வையால் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்ற சம்பவம் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது. 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!