சூறாவளியில் சாலையில் வீழ்ந்த மரங்கள்! தஞ்சையில் போக்குவரத்து பாதிப்பு

தஞ்சாவூரில் வீசிய  பலத்த சூறாவளி காற்றால்  கோர்ட் ரோட்டில்  உள்ள  50 ஆண்டு பழைமையான அரச மரத்தின் கிளை நடுரோட்டில் முறிந்து விழுந்தது. இதனால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதோடு,  4 மணி நேரத்திற்கும் மேலாக மின்தடையும்  ஏற்பட்டது. 
 

தஞ்சாவூர்

தஞ்சாவூரில் கடந்த சில தினங்களாக மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. இன்று காலை முதலே லேசான  மழை தூறல் விழுந்தபடியே இருந்தது. மதியத்திற்கு மேல் திடீரென பலத்த சூறாவளிக் காற்று வீசத் தொடங்கியது. இதனால் நகரம் முழுவதும் புழுதியுடன் காற்று வீசியதால் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி, சாலைகளில் நடந்து சென்றவர்களும் சிரமத்திற்குள்ளாகினர். 
இந்நிலையில், கோர்ட் ரோட்டில் தலுகாக அலுவலகம் முன்பு இருந்த 50 ஆண்டுகால பழைமையான அரச மரத்தின் கிளை ஒன்று முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் சாலையில் இருபுறம் இருந்த மின்சார கம்பிகள் அறுந்தும், மின்கம்பங்கள் சாய்ந்தும் கிடந்தன.  இதுகுறித்து தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு வந்த மின்வாரிய ஊழியர்கள் மரத்தை அகற்றும் பணியில் ஈடுப்பட்டனர். இதனால் அப்பகுதியில் உள்ள பழைய கலெக்டர் அலுவலகம், கோர்ட், தலுகாக அலுவலகம், காவலர் பயிற்சி பள்ளி உள்ளிட்ட இடங்களில் 4 மணி நேரத்திற்கும் மேலாக மின்தடை ஏற்பட்டது. போக்குவரத்தும் பெரிதாக பாதிக்கப்படவே, வாகனங்கள் மாற்று வழியில் அனுப்பட்டன. இதேபோல் இன்னும் சில இடங்களிலும் மரங்கள் முறிந்து விழுந்தன.

தஞ்சாவூர்

காற்றின் வேகம் அதிமாக இருந்தால் அண்ணாசிலை அருகே போலீஸாரால் வைக்கப்படிருந்த தடுப்புகள் காற்றில் பறந்து வாகனங்களின் சென்றவர்களின்  அருகே விழுந்தது. இதில் இரு சக்கரவாகனத்தில் சென்ற சிலரின் காலில் விழுந்ததில் அவர்களுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டன. அத்துடன் பழைய பஸ் ஸ்டாண்ட், ஆற்றுபாலம், ரயில்வே ஸ்டேஷன்களில் வைக்கப்பட்டிருந்த மெகா சைஸ் பிள்கஸ் போர்டுகள் சாலையில் விழுந்தன. இதனால்  பெரிய அளவில் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. திடீரென வீசிய இந்த சூறைக் காற்றால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!